நெய்தல் · வெண்கண்ணனார்
பெயரெச்சம் இடப்பெயர்கொண்டது. மாதர் - காதலுமாம். · வெண்கண்ணனார் பாடியது
அம்ம வாழி கேளிர் முன்நின்றுகண்டனிர் ஆயின் கழறலிர் மன்னோநுண்தாது பொதிந்த செங்கால் 1கொழுமுகைமுண்டகங் கெழீஇய மோட்டுமணல் அடைகரைப்பேஎய்த் தலைய பிணர் அரைத் தாழைஎயிறுடை நெடுந்தோடு காப்பப் பலவுடன்வயிறுடைப் போது வாலிதின் 2விரீஇப்புலவுப்பொரு தழித்த பூநாறு பரப்பின்இவர்திரை தந்த ஈர்ங்கதிர் முத்தம்கவர்நடைப் புரவிக் கால்வடுத் தபுக்கும்நற்றேர் வழுதி கொற்கை முன்துறைவண்டுவாய் திறந்த வாங்குகழி நெய்தல்போதுபுறங் கொடுத்த உண்கண்மாதர் வாள்முகம் மதைஇய நோக்கே.
பெயரெச்சம் இடப்பெயர்கொண்டது. மாதர் - காதலுமாம். · வெண்கண்ணனார் பாடியது