poem 206 · Akananuru · Many poets

அகநானூறு 206 · மருதம் · மதுரை மருதனிள நாகனார்

என்னெனப் படுங்கொல் தோழி நன்மகிழ்ப்பேடிப் பெண்கொண் டாடுகை கடுப்பநகுவரப் பணைத்த திரிமருப் பெருமைமயிர்க்கவின் கொண்ட மாத்தோல் இரும்புறப்சிறுதொழில் மகாஅர் ஏறிச் சேணோர்க்குத்துறுகல் மந்தியில் தோன்றும் ஊரன்மாரி ஈங்கை மாத்தளி ரன்னஅம்மா மேனி ஆயிழை மகளிர்ஆரந் தாங்கிய அலர்முலை ஆகத்துஆராக் காதலொடு தாரிடைக் குழையமுழவுமுகம் புலரா விழவுடை வியனகர்வதுவை மேவல னாகலின் அதுபுலந்துஅடுபோர் வேளிர் வீரை முன்துறைநெடுவெள் ளுப்பின் நிரம்பாக் குப்பைபெரும்பெயற்கு உருகி யாஅங்குத்திருந்திழை நெகிழந்தன தடமென் றோளே.

Ennenap patungkol thoazhi nanmakizhp / Paetip penkon taatukai katuppa / Nakuvarap panaiththa thirimarup perumai / Mayirkkavin konta maaththoal irumpurap / Siruthozhil makaaar aeris saenoarkkuth / Thurukal manthiyil thoanrum ooran / Maari eengkai maaththali ranna / Ammaa maeni aayizhai makalir / Aaran thaangkiya alarmulai aakaththu / Aaraak kaathalotu thaaritaik kuzhaiya / Muzhavumukam pularaa vizhavutai viyanakar / Vathuvai maevala naakalin athupulanthu / Atupoar vaelir veerai munthurai / Netuvel luppin nirampaak kuppai / Perumpeyarku uruki yaaangkuth / Thirunthizhai nekizhanthana thatamen roalae.

Share
கதை

மருதம் · மதுரை மருதனிள நாகனார்

வாயில் வேண்டிச் சென்றவிறலிக்குத் தலைமகள் வாயில் மறுத்து. · மதுரை மருதனிள நாகனார் பாடியது