வால்மீகி இராமாயணம், அயோத்தியா காண்டம், சர்க்கம் 63–64தசரதனுக்கு வந்த சாபம்
ராமன் காட்டுக்குச் சென்ற ஆறாவது நாள் இரவு. தூக்கம் வராமல் தவித்த தசரதன் கௌசலையை அழைத்து, இளமையில் தான் செய்த ஒரு பிழையை நினைவுகூர்ந்தான்.
இளவரசனாக இருந்தபோது, ஒலியைக் கேட்டே இலக்கை அடிக்கும் வில்வித்தையில் அவன் பெயர் பெற்றிருந்தான். ஒரு மழைக்கால இரவு சரயு நதிக்கரையில் வேட்டைக்குச் சென்றான். இருட்டில் நீரில் 'குடுகுடு' என்று ஓசை கேட்டது. யானை தண்ணீர் குடிக்கிறது என்று எண்ணி, ஓசை வந்த திசையில் அம்பு எய்தான். உடனே ஒரு மனிதக் குரல் அலறியது. ஓடிச் சென்று பார்த்தபோது, கண் தெரியாத வயதான பெற்றோருக்குக் குடத்தில் தண்ணீர் நிரப்ப வந்த ஒரு இளம் தவசி அம்பு பட்டுக் கிடந்தான். 'நான் உனக்கு என்ன தீங்கு செய்தேன்? என் தாய் தந்தையர் தாகத்தோடு காத்திருக்கிறார்கள்; அவர்களிடம் சென்று சொல்' என்று சொல்லி அவன் உயிர் விட்டான். (பிற்கால மரபு அவனை ச்ரவணன் என்று அழைக்கிறது.)
தசரதன் தண்ணீரோடு அந்த முதியவர்களிடம் சென்று நடந்ததைச் சொன்னான். மகனை இழந்த தந்தை, 'நான் இப்போது மகனுக்காக அழுது உயிர் விடுவது போல, நீயும் ஒருநாள் மகனுக்காக ஏங்கியே உயிர் விடுவாய்' என்று சாபம் கொடுத்தார். இருவரும் அங்கேயே உயிர் நீத்தார்கள்.
அந்தக் கதையைக் கௌசலையிடம் சொல்லி முடித்த அன்றிரவே, 'ராமா' என்று அழைத்தபடி தசரதன் உயிர் நீத்தான். குலசேகரர் இந்தப் பத்தில் தசரதனாகவே மாறிப் புலம்புகிறார். ராமன் மேல் தசரதன் வைத்த அன்பும், அதை இழந்த வலியும் ஒவ்வொரு பாசுரத்திலும் கேட்கிறது.
Valmiki Ramayana, Ayodhya Kanda, Sargas 63–64The curse that came back to Dasaratha
It was the sixth night after Rama left for the forest. Unable to sleep, Dasaratha called Kausalya and told her of a wrong he had done in his youth.
As a prince he was famous for archery that could strike a target by sound alone. One rainy night he went hunting on the bank of the Sarayu. In the dark he heard a gurgling sound in the water. Thinking an elephant was drinking, he shot an arrow towards the sound. At once a human voice cried out. Running there, he found a young ascetic lying struck by the arrow. He had come to fill a pot with water for his blind, aged parents. 'What harm did I do you? My mother and father are waiting, thirsty. Go and tell them,' he said, and died. (Later tradition calls him Shravana.)
Dasaratha took the water to the old couple and told them what had happened. The father who had lost his son cursed him: 'As I now die weeping for my son, you too will one day die longing for your son.' Both of them gave up their lives there.
On the very night he finished telling this to Kausalya, Dasaratha died calling 'Rama'. In this decade Kulasekhara becomes Dasaratha and laments. The father's love for Rama, and the pain of losing him, sound in every pasuram.