பாடல் 2008 · கம்பராமாயணம் · கம்பர்
அயோத்தியா காண்டம் · தைலமாட்டு படலம் · பாடல் 79 / 86
விழித்தெழுந்த மக்கள் இராமனைக்காணாது வருந்தல்
கம்பராமாயணம் 2008 · தைலமாட்டு படலம்
வருந்தா வண்ணம் வருந்தினார் ,மறந்தார் தம்மை , வள்ளலும் ஆங்குஇருந்தான் என்றே இருந்தார்கள்எல்லாம் எழுந்தார் ; அருள் இருக்கும்பெருந் தாமரைக் கண் கரும் முகிலைபெயர்ந்தார் , காணார் , பேதுற்றார் ;'பொருந்தா நயனம் பொருந்தி நமைப்பொன்றச் சூழ்ந்த ' எனப் புரண்டார் .