பாடல் 4978 · கம்பராமாயணம் · கம்பர்
சுந்தர காண்டம் · ஊர் தேடு படலம் · பாடல் 33 / 234
கம்பராமாயணம் 4978 · ஊர் தேடு படலம்
விளரிச் சொல்லியர் ஓதியால், வேலையுள் மிடைந்தபவளக் கோடு எனப் பொலிந்தது! படைநெடும் கண்ணால்,குவளைக் கோட்டகம் கடுத்தது! குளிர்முகக் குழுவால்,முளரிக் கானமும் ஒத்தது, முழங்குநீர் இலங்கை!