பாடல் 8320 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · நாகபாசப் படலம் · பாடல் 188 / 300
இலக்குவன் அனுமன் தோளில் நின்று இறங்கி இளைப்பாறுதல்
கம்பராமாயணம் 8320 · நாகபாசப் படலம்
அது கணத்து, அனுமன் தோள்நின்று ஐயனும் இழிந்து, வெய்யகது வலிச் சிலையை வென்றி அங்கதன் கையது ஆக்கி,முதுகு உறச் சென்று நின்ற கணை எலாம் முறையின் வாங்கி,விது விதுப்பு ஆற்றலுற்றான், விளைகின்றது உணர்ந்திலாதான்.