பாடல் 8399 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · நாகபாசப் படலம் · பாடல் 267 / 300
இராமன் கருடனை யாரென வினவி அவன் உதவியைப் பாராட்டுதல்
கம்பராமாயணம் 8399 · நாகபாசப் படலம்
‘ஐய! நீ யாரே? எங்கள் அருந்தவப் பயத்தினான் வந்து, இங்குஎய்தினை; உயிரும் வாழ்வும் ஈந்தனை; எம்மனோரால்கையுறை கோடற்கு ஒத்த காட்சியை அல்லை; மீட்சிசெய்திறம் இலையால் ‘என்றான் தேவர்க்கும் தெரிகிலாதான்.