பாடல் 8794 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · பிரமாத்திரப் படலம் · பாடல் 222 / 231
இராமன் துயர்நிலையைக்கண்டு துணுக்குற்ற தேவர்கள், அவனது இறைமைத் தன்மையையும் அவதாரத்தின் உண்மையையும் எடுத்துக்கூறித் தம்மைக் காத்தருளுமாறு வேண்டுதல்
கம்பராமாயணம் 8794 · பிரமாத்திரப் படலம்
கண்டார் விண்ணோர்; கண்கள் புடைத்தார், கலுழ்கின்றார்;கொண்டார் துன்பம், 'என்முடிவு? ' என்னா, குலைகின்றார்?'அண்டா! ஐயா! எங்கள் பொருட்டால் அயர்கின்றாய்;உண்டோ உன்பால் துன்பு? ' என, அன்பால் உரைசெய்தார்.