பாடல் 25 · மதுரை மீனாட்சியம்மை குறம் · குமரகுருபரர்
மதுரை மீனாட்சியம்மை குறம் 25 · எண்சீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்
குங்குமஞ்சந் தனக்குழம்பிற் குழைத்துத்தரை மெழுகிக்கோலமிட்டுக் குங்குலியக் கொழும்புகையுங் காட்டிச்செங்கனக நவமணிக டிசைநான்கும் பரப்பித்தென்மேலை மூலைதனிற் பிள்ளையார் வைத்துப்பொங்குநறு மலறுகோ டைங்கரர்க்குச் சாத்திப்புழுகுநெய்வார்த் திடுவிளக்கு நிறைநாழி வைத்துமங்கையருக் கரசியெங்க ளங்கயற்கண் ணமுதைமனத்துள்வைத்து நினைத்தகுறி யினிச்சொலக்கே ளம்மே.