பாடல் 2054 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
இரண்டாம் திருமுறை · திருக்கோட்டாறு · பாடல் 3 / 11
திருக்கோட்டாறு · 2.52.3
விரவி நாளும் விழாவி டைப்பொலி தொண்டர் வந்துவியந்து பண்செயக் குரவ மாரும்நீழற் பொழில்மல்கு கோட்டாற்றில்அரவ நீள்சடை யானை யுள்கிநின் றாத ரித்துமுன்அன்பு செய்தடி பரவுமாறு வல்லார் பழிபற் றறுப்பாரே.