பாடல் 2234 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
இரண்டாம் திருமுறை · திருக்கடம்பூர் · பாடல் 7 / 11
திருக்கடம்பூர் · 2.68.7
பலிகெழு செம்மலர் சாரப் பாடலொ டாட லறாதகலிகெழு வீதி கலந்த கார்வயல் சூழ்கடம் பூரில்ஒலிதிகழ் கங்கை கரந்தான் ஒண்ணுத லாள்உமை கேள்வன்புலியத ளாடையி னான்றன் புனைகழல் போற்றல் பொருளே.