பாடல் 4125 · தேவாரம் · திருஞானசம்பந்தர்

மூன்றாம் திருமுறை · திருவீழிமிழலை · பாடல் 3 / 11

திருவீழிமிழலை · 3.119.3

நிருத்தனா றங்கன் நீற்றன் நான்மறையன் நீலமார் மிடற்றன்நெற் றிக்கண்ஒருத்தன்மற் றெல்லா வுயிர்கட்கும் உயிராய் யுளனிலன் கேடிலி யுமைகோன்திருத்தமாய் நாளும் ஆடுநீர்ப் பொய்கை சிறியவர் அறிவினின் மிக்கவிருத்தரை யடிவீழ்ந் திடம்புகும் வீழி மிழலையா னெனவினை கெடுமே.
பகிர்