பாடல் 7102 · தேவாரம் · திருநாவுக்கரசர்

ஆறாம் திருமுறை · திருத்தலையாலங்காடு - திருத்தாண்டகம் · பாடல் 7 / 10

திருத்தலையாலங்காடு – திருத்தாண்டகம் · 6.79.7

விடையேறிக் கடைதோறும் பலிகொள் வானை வீரட்டம் மேயானை வெண்ணீற் றானைமுடைநாறு முதுகாட்டி லாட லானை முன்னானைப் பின்னானை அந்நா ளானைஉடையாடை யுரிதோலே உகந்தான் றன்னை உமையிருந்த பாகத்து ளொருவன் றன்னைச்சடையானைத் தலையாலங் காடன் றன்னை சாராதே சாலநாள் போக்கி னேனே.
பகிர்