பாடல் 7106 · தேவாரம் · திருநாவுக்கரசர்

ஆறாம் திருமுறை · திருமாற்பேறு - திருத்தாண்டகம் · பாடல் 1 / 10

திருமாற்பேறு – திருத்தாண்டகம் · 6.80.1

பாரானைப் பாரினது பயனா னானைப் படைப்பாகிப் பல்லுயிர்க்கும் பரிவோன் றன்னைஆராத இன்னமுதை அடியார் தங்கட் கனைத்துலகு மானானை அமரர் கோனைக்காராருங் கண்டனைக் கயிலை வேந்தைக் கருதுவார் மனத்தானைக் காலற் செற்றசீரானைச் செல்வனைத் திருமாற் பேற்றெஞ் செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.
பகிர்