வலம்படு வென்றி
நான்காம் பத்து · காப்பியாற்றுக் காப்பியனார் பாடியது · பாடப்பட்டோன்: களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் · செந்துறைப் பாடாண்பாட்டு
வாழ்கநின் வளனே நின்னுடை வாழ்க்கைவாய்மொழி வாயர் நின்புகழ் ஏத்தப்பகைவர் ஆரப் பழங்கண் அருளிநகைவர் ஆர நன்கலம் சிதறிஆன்(று)அவிந்(து) அடங்கிய செயிர்தீர் செம்மல்வான்தோய் நல்இசை உலகமொ(டு) உயிர்ப்பத்துளங்குடி திருத்திய வலம்படு வென்றியும்மாஇரும் புடையல் மாக்கழல் புனைந்துமன்எயில் எறிந்து மறவர்த் தாணஇத்தொல்நிலைச் சிறப்பின் நின்நிழல் வாழ்நர்க்குக்கோ(டு)அற வைத்த கோடாக் கொள்கையும்நன்றுபெரி(து) உடையையால் நீயேவெந்திறல் வேந்தேஇவ் வுலகத் தோர்க்கே.
நான்காம் பத்து · காப்பியாற்றுக் காப்பியனார் பாடியது · பாடப்பட்டோன்: களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் · செந்துறைப் பாடாண்பாட்டு