மலைபடுகடாம்
அடிகள் 11–20 · இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார்
நொடிதரு பாணிய பதலையும் பிறவும்கார்கோட் பலவின் காய்த்துணர் கடுப்பநேர்சீர் சுருக்கிக் காய கலப்பையிர்கடுக்கலித் தெழுந்த கண்ணகன் சிலம்பில்படுத்துவைத் தன்ன பாறை மருங்கின்எடுத்துநிறுத் தன்ன இட்டருஞ் சிறுநெறிதொடுத்த வாளியர் துணைபுணர் கானவர்இடுக்கண் செய்யா தியங்குநர் இயக்கும்அடுக்கல் மீமிசை அருப்பம் பேணாதுஇடிச்சுர நிவப்பின் இயவுக்கொண் டொழுகித்
மாத்திரையைச் சொல்லும் தாளத்தையுடைய ஒரு கண் மாக்கிணையும், கூறாத ஏனை வாத்தியங்களும், கார்காலத்தால் பழுத்த பலாவினது காய்த் தொத்தை போல, தம்மில் ஒத்த கனத்தையுடையவாகக் கட்டிக் காவின வாத்திய முட்டுக்களையுடைய பையை உடையராய், மலைப் பக்கத்தே கடுமரம் மிக்கு வளர்ந்த இடமகன்ற சிலம்பில், படுத்து வைத்தாற் போன்ற ஒத்த நிலமாகிய கற்பாறையின் பக்கத்தே, நிலத்தே கிடக்கின்ற வழியை எடுத்து நிறுத்தினாற் போன்ற இட்டிய அரிய சிறிய வழியை, தொடுத்த அம்பினையுடையராய்த் தம் மனைவியரோடு கூடியிருக்கின்ற கானவர் வழி போவாரை வருத்துதலைச் செய்யாமல் போக்கும். மலையிடத்து மிக்க உயர்ச்சியிற் கல்லையிடித்த அருநிலத்தில் உயர்ந்த வழியைப் போதற்கு அரிதாகக் கருதாதே போதக் கடவோம் என்று நெஞ்சாலே கொண்டு நடந்து,
With the one-eyed drum that keeps the measure of the matra, and the rest of the instruments not named, the players carry their sacks of instrument-cases bound so that they are all of like weight, like a cluster of pala fruit ripened by the rains. Along the wide hillside where the hard trees grew thick, past the rock that lies level as though it had been laid down, along the narrow difficult track that looks as if a fallen path had been lifted and set upright, the forest folk with their arrows strung, living with their wives, let travellers pass without hurting them. And saying in their hearts, "We shall go — this is not too hard," they walk the high stony climb of the hill,
இப்போது இசைக்காரர் பயணம் செய்கிறார்கள்: மலைப்பாதை, கற்பாறை, கானவர், ஏற்றம். அதாவது மலைபடுகடாம் ஒரு பயணக் கவிதை.
கானவர் வழிப்போக்கரை வருத்துவதில்லை என்று உரை சொல்கிறது. அதாவது காடு கொடியது அல்ல; அதில் ஒரு ஒழுக்கம் இருக்கிறது. பயணம் என்பது இயற்கையோடு ஒரு ஒப்பந்தம்.
Now the musicians travel: the hill track, the rock, the forest folk, the climb. Malaipadukadam is a poem of a journey.
The urai notes the forest folk do not harm travellers. The forest is not cruel; it has its own law. A journey is a contract with nature.
அடிகள் 11–20 · இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார்
Lines 11–20 · Perunkausikanar of Iraniyamuttam in Perunkunrur
காட்டு மக்களின் ஒழுக்கத்தைப் பாடுவது பயணக் கவிதைக்கு ஏன் தேவை?
Why does a travel poem need the forest folk's code of conduct?