Passage 4 · Pattinappalai · Kadiyalur Uruttirankannanar

பட்டினப்பாலை 4 · பணைநிலைப் புரவியின் அணைமுதற் பிணிக்கும

பணைநிலைப் புரவியின் அணைமுதற் பிணிக்கும்கழிசூழ் படப்பைக் கலியாணர்ப்பொழிற் புறவிற் பூந்தண்டலைமழைநீங்கிய மாவிசும்பின்மதிசேர்ந்த மகவெண்மீன்உருகெழுதிறல் உயர்கோட்டத்துமுருகமர்பூ முரண்கிடக்கைவரியணிசுடர் வான்பொய்கைஇருகாமத் திணையேரிப்புலிப்பொறிப் போர்க்கதவின்
Share

பொருள்

பந்தியிலே நிற்றலையுடைய குதிரைகளைப் பிணிக்குமாறு போலச் சார்ந்த தறிகளிலே பிணிக்கும், கழி சூழ்ந்த பக்கத்தையும், மனச்செருக்கு எழுதற்குக் காரணமான புது வருவாயினையுடைய தோப்புக்களுக்குப் புறம்பாகிய பூஞ்சோலைகளையும், மழை மாசு நீங்கிய பெரிய ஆகாயத்தில் மதியைச் சேர்ந்த மகமாகிய வெள்ளி மீனின் வடிவு பொருந்தின வலியையுடைய உயர்ந்த கரையையுடைய நல்ல பொய்கைகளையும், மணம் பொருந்தின பூக்கள் நிறத்தால் தம்முள் மாறுபட்ட பரப்பாலே பல நிறம் அணிந்த ஒளியினையுடைய பொய்கைகளையும், இம்மையிலும் மறுமையிலும் உண்டாகிய காமவிழைவைக் கொடுத்தற்குரிய இணைந்த ஏரிகளையும், புலியாகிய அடையாளத்தையும் பலகைகள் தம்மிற் சேருதலையுடைய கதவையும் உடைய —

Meaning

The gardens fenced with stakes where horses are tied as they would be tied at their manger; the flower groves outside the orchards whose new revenue makes the mind proud; the fine ponds whose high firm banks are shaped like the white star of Magha when it has come near the moon in a sky washed clean of cloud; the ponds shining with many colours where the fragrant flowers spread in rivalry with one another; the twin tanks that grant the desire of love in this world and the next; and the gate of war with the tiger's image on it —

சொற்பொருள் Word by word

பணைநிலைப் புரவி
the horse that keeps to the manger
அணைமுதல் பிணிக்கும்
tied at the post by the bank
கழிசூழ் படப்பை
the garden fenced with stakes
கலி ஆணர்
whose revenue makes the mind proud
பொழில் புறவு
the grove outside the orchard
மழை நீங்கிய மா விசும்பு
the great sky washed of rain
மதி சேர்ந்த மக வெண்மீன்
the white star Magha come near the moon
உயர் கோட்டம்
the high bank
முருகு அமர் பூ
flowers full of scent
முரண் கிடக்கை
spread in rivalry
இரு காமத் திணை ஏரி
the twin tanks granting love in both worlds
புலிப்பொறி
the tiger's image
போர்க் கதவு
the gate of war

விளக்கம்

இந்தப் பத்தில் ஒரு முக்கியமான இணைப்பு: பொய்கையின் கரை மக நட்சத்திரம் போல — அதாவது நகரின் கட்டிடக்கலை வானத்தைப் பின்பற்றுகிறது. மனிதன் இயற்கையின் வடிவை நகலெடுக்கிறான்.

"இருகாமத் திணை ஏரி" — இம்மையிலும் மறுமையிலும் காதலைத் தரும் குளம். அதாவது நகரின் நீரே ஆசீர்வாதம். இது பட்டினத்தின் புனித நிலம்.

Explanation

An important link here: the tank's bank is shaped like the star Magha. The city's architecture follows the sky. Man copies nature's forms.

"The twin tanks that grant love in both worlds": the city's water is itself a blessing. This is Pattinam's sacred ground.

கதை

பட்டினப்பாலை

அடிகள் 31–40 · கடியலூர் உருத்திரங் கண்ணனார்

A story

Lines 31–40 · Kadiyalur Uruttirankannanar

சிந்தனைக்கு

நகரின் கட்டிடக்கலை வானத்தைப் பின்பற்றுவது மதமா, அல்லது அழகியலா?

To reflect on

Is architecture that copies the sky religion, or aesthetics?