பழநி
பழநி
தனதனன தத்த தந்த தனதனன தத்த தந்ததனதனன தத்த தந்த ...... தனதானகளபமுலை யைத்தி றந்து தளவ நகை யைக்கொ ணர்ந்துகயலொடுப கைத்த கண்கள் ...... குழைதாவக்கரியகுழ லைப்ப கிர்ந்து மலர்சொருகு கொப்ப விழந்துகடியிருளு டுக்கு லங்க ...... ளெனவீழமுழுமதி யெனச்சி றந்த நகைமுக மினுக்கி யின்பமுருகிதழ்சி வப்ப நின்று ...... விலைகூறிமுதலுளது கைப்பு குந்து அழகுதுகி லைத்தி றந்துமுடுகுமவ ருக்கி ரங்கி ...... மெலிவேனோஇளமதி கடுக்கை தும்பை அரவணி பவர்க்கி சைந்துஇனியபொரு ளைப்ப கர்ந்த ...... குருநாதாஇபமுகவ னுக்கு கந்த இளையவ மருக்க டம்பஎனதுதலை யிற்ப தங்க ...... ளருள்வோனேகுழகென எடுத்து கந்த உமைமுலை பிடித்த ருந்துகுமரசிவ வெற்ப மர்ந்த ...... குகவேலாகுடிலொடு மிகச்செ றிந்த இதணுள புனத்தி ருந்தகுரவர்மக ளைப்பு ணர்ந்த ...... பெருமாளே.
பழநி
Palani