பாடல் 8564 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · மகரக் கண்ணன் வதைப் படலம் · பாடல் 30 / 38
அரக்கன் மாய, மாயையும் அகலுதல்
கம்பராமாயணம் 8564 · மகரக் கண்ணன் வதைப் படலம்
அயில்படைத்து உருமின் செல்லும் அம்பொடும், அரக்கன் யாக்கை,புயல்படக் குருதி வீசி, படியிடைப் புரள்தலோடும்வெயில் கெடுத்து இருளை ஓட்டும் காலத்தின் விளைவினோடும்துயில் கெடக் கனவு மாய்ந்தால் ஒத்தது சூழ்ந்த மாயை.