பாடல் 3191 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
மூன்றாம் திருமுறை · திருஉசாத்தானம் · பாடல் 4 / 9
திருஉசாத்தானம் · 3.33.4
மறிதரு கரத்தினான் மால்விடை யேறியான்குறிதரு கோலநற் குணத்தினார் அடிதொழநெறிதரு வேதியர் நித்தலும் நியமஞ்செய்செறிதரு பொழிலணி திருவுசாத் தானமே.