பாடல் 3888 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
மூன்றாம் திருமுறை · திருச்சிறுகுடி - திருமுக்கால் · பாடல் 3 / 11
திருச்சிறுகுடி – திருமுக்கால் · 3.97.3
தெள்ளிய புனலணி சிறுகுடி மேவிய துள்ளிய மானுடை யீரே துள்ளிய மானுடை யீரும தொழுகழல் உள்ளுதல் செயநலம் உறுமே.