பாடல் 6649 · தேவாரம் · திருநாவுக்கரசர்
ஆறாம் திருமுறை · திருவாரூர் - அரநெறிதிருத்தாண்டகம் · பாடல் 2 / 10
திருவாரூர் – அரநெறிதிருத்தாண்டகம் · 6.33.2
கற்பகமும் இருசுடரு மாயி னானைக் காளத்தி கயிலாய மலையு ளானைவிற்பயிலும் மதனழிய விழித்தான் றன்னை விசயனுக்கு வேடுவனாய் நின்றான் றன்னைப்பொற்பமரும் பொழிலாரூர் மூலத் தானம் பொருந்தியவெம் பெருமானைப் பொருந்தார் சிந்தைஅற்புதனை அரநெறியி லப்பன் றன்னை அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.