பாடல் 6646 · தேவாரம் · திருநாவுக்கரசர்
ஆறாம் திருமுறை · திருவாரூர் - போற்றித்திருத்தாண்டகம் · பாடல் 9 / 10
திருவாரூர் – போற்றித்திருத்தாண்டகம் · 6.32.9
பூவார்ந்த சென்னிப் புனிதா போற்றி புத்தேளிர் போற்றும் பொருளே போற்றிதேவார்ந்த தேவர்க்குந் தேவே போற்றி திருமாலுக் காழி யளித்தாய் போற்றிசாவாமே காத்தென்னை யாண்டாய் போற்றி சங்கொத்த நீற்றெஞ் சதுரா போற்றிசேவார்ந்த வெல்கொடியாய் போற்றி போற்றி திருமூலத் தானனே போற்றி போற்றி.