பாடல் 6647 · தேவாரம் · திருநாவுக்கரசர்

ஆறாம் திருமுறை · திருவாரூர் - போற்றித்திருத்தாண்டகம் · பாடல் 10 / 10

திருவாரூர் – போற்றித்திருத்தாண்டகம் · 6.32.10

பிரமன்றன் சிரமரிந்த பெரியோய் போற்றி பெண்ணுருவோ டாணுருவாய் நின்றாய் போற்றிகரநான்கும் முக்கண்ணு முடையாய் போற்றி காதலிப்பார்க் காற்ற எளியாய் போற்றிஅருமந்த தேவர்க் கரசே போற்றி அன்றரக்கன் ஐந்நான்கு தோளுந் தாளுஞ்சிரம்நெரித்த சேவடியாய் போற்றி போற்றி திருமூலத் தானனே போற்றி போற்றி.
பகிர்