சதகம் என்பது ஒரு பொருளைக் கொண்டு நூறு பாடல்களால் இயற்றப்படும் பிரபந்தம். இலக்கண நூல்கள் வெண்பாவாலோ கலித்துறையாலோ ஒரு தெய்வத்தையோ ஒரு தலத்தையோ ஒரு நாட்டையோ புகழ்ந்து பாடுவதைச் சதகத்தின் இலக்கணமாகக் கூறுகின்றன. பதிற்றுப்பத்தைத் தமிழின் முதல் சதகம் எனலாம்; பின்னர் மாணிக்கவாசகரின் திருச்சதகம், மண்டல சதகங்கள், தலச் சதகங்கள், நீதிச் சதகங்கள் என்று நூற்றுக் கணக்கில் பெருகின.
இங்கே ஒவ்வொரு சதகமும் தனித் தொகுப்பாக உள்ளது. பாடல்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன; உரையும் விளக்கமும் பின்னர் சேரும். மூலங்கள் பொது உரிமையான Project Madurai மின்னூல்களிலிருந்து எடுக்கப்பட்டவை.
சிவன் திருத்தலங்கள்
- அண்ணாமலைச் சதகம்Annamalai Satakamதிருச்சிற்றம்பல நாவலர் · அருணாசலேசுவரர் மேல்103 பாடல்கள்
- அருணாசல சதகம்Arunachala Satakamகாஞ்சிபுரம் சபாபதி முதலியார் · அருணாசலர் மேல்101 பாடல்கள்
- நடராச சதகம்Nadaraja Satakamசிதம்பரநாத முனிவர் · தில்லை நடராசர் மேல்101 பாடல்கள்
- சதுரகிரி அறப்பளீசுர சதகம்Chaturagiri Arappaleeswarar Satakamஅம்பலவாணக் கவிராயர் · சதுரகிரி அறப்பளீசுரர் மேல்99 பாடல்கள்