பாடல் 6408 · தேவாரம் · திருநாவுக்கரசர்
ஆறாம் திருமுறை · திருஆமாத்தூர் - திருத்தாண்டகம் · பாடல் 4 / 10
திருஆமாத்தூர் – திருத்தாண்டகம் · 6.9.4
பசைந்தபல பூதத்தர் பாட லாடல் படநாகக் கச்சையர் பிச்சைக் கென்றங்கிசைந்ததோ ரியல்பினர் எரியின் மேனி இமையாமுக் கண்ணினர் நால்வே தத்தர்பிசைந்ததிரு நீற்றினர் பெண்ணோர் பாகம் பிரிவறியாப் பிஞ்ஞகனார் தெண்ணீர்க் கங்கைஅசைந்த திருமுடியர் அங்கைத் தீயர் அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.