பாசுரம் 1345 · பதினோராம் திருமுறை · நம்பியாண்டார் நம்பி
நம்பியாண்டார் நம்பி · ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை · பாடல் 18 / 30
நம்பியாண்டார் நம்பி · பாசுரம் 1345
தழைக்கின்ற சீர்மிகு ஞானசம் பந்தன் தடமலைவாய்அழைக்கின்ற மஞ்ஞைக் கலர்ந்தன கோடல்அம் பெய்திடுவான்இழைக்கின்ற தந்தரத் திந்திர சாபம்நின் எண்ணமொன்றும்பிழைக்கின்ற தில்லைநற் றேர்வந்து தோன்றிற்றுப் பெய்வளையே.