வரம்பில் வெள்ளம்
நான்காம் பத்து · காப்பியாற்றுக் காப்பியனார் பாடியது · பாடப்பட்டோன்: களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் · வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு
இறும்பூதால் பரிதே கொடித்தேர் அண்ணல்வடிமணி அனைத்த பனைமருள் நோன்தாள்கடிமரத்தான் களி(று)அணைத்துநெடுநீர துறைகலங்கமூழ்த்(து)இறுத்த வியன்தானையொடுபுலம்கெட நரிதரும் வரம்பில் வெள்ளம்வாள்மதில் ஆக வேல்மிளை உயர்த்துவில்இசை உமிழ்ந்த வைம்முள் அம்பின்செவ்வாய் எஃகம் வளைஇய அகழின்கார்இடி உருமின் உரறும் முரசின்கால்வழங்(கு) ஆர்எயில் கருதின்போர்எதிர் வேந்தர் ஒரூஉப நின்னே.
நான்காம் பத்து · காப்பியாற்றுக் காப்பியனார் பாடியது · பாடப்பட்டோன்: களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் · வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு