poem 31 · Thiruvarur Nanmanimalai · Kumaraguruparar
திருவாரூர் நான்மணி மாலை 31 · கட்டளைக் கலித்துறை
தண்மல ரும்பொழிற் றென்கம லேசர்க்குச் சாத்துகின்றஒண்மலர் சொன்மலர்க் கொவ்வாது போலுமற் றோர்புலவன்பண்மலர் சாத்திப் பணிகொண்ட வாபச்சை மால்சிவந்தகண்மலர் சாத்தியுங் காண்பரி தான கழன்மலரே.