பெரிய புராணம் (சேக்கிழார்): திருமூல நாயனார் புராணம்; திருமந்திரப் பாயிரம்மூலன் உடலில் புகுந்த சிவயோகி
திருக்கயிலையில் நந்தியெம்பெருமானிடம் உபதேசம் பெற்ற சிவயோகியர் எண்மரில் ஒருவர், பொதிகை மலையில் இருந்த அகத்திய முனிவரைக் காண விரும்பித் தென்திசை நோக்கிப் புறப்பட்டார். திருக்கேதாரம், பசுபதிநாதம், காசி, திருப்பருப்பதம், திருக்காளத்தி, திருவாலங்காடு, காஞ்சி, தில்லை என்று தலங்களை வணங்கி வந்து, காவிரிக் கரையில் திருவாவடுதுறையை அடைந்தார். அங்கே இறைவனை வணங்கிய பின்னும் அந்தத் தலத்தை விட்டுப் பிரிய அவர் மனம் ஒப்பவில்லை.
ஒருநாள் காவிரிக் கரைச் சோலையில் பசுக்கள் கூடி நின்று கதறுவதைக் கண்டார். சாத்தனூரைச் சேர்ந்த மூலன் என்ற இடையன் அங்கே இறந்து கிடந்தான். பசுக்கள் அவன் உடலைச் சுற்றி வந்து, மோந்து, கண்ணீர் வடித்தன. வாயில்லா உயிர்களின் துயரைக் கண்டு யோகியின் உள்ளம் இரங்கியது. தம் உடலை ஒரு மறைவான இடத்தில் பாதுகாப்பாக வைத்துவிட்டு, யோக ஆற்றலால் மூலனின் உடலுக்குள் தம் உயிரைச் செலுத்தினார். மூலன் எழுந்தான். பசுக்கள் மகிழ்ந்து துள்ளின; வால் தூக்கி ஓடி மேய்ந்தன.
மாலையில் பசுக்கள் தாமே ஊர் நோக்கி நடந்தன; யோகியும் பின் தொடர்ந்தார். மூலனின் மனைவி கணவன் என்று நினைத்து அருகே வந்தபோது அவர் விலகி, "உனக்கும் எனக்கும் உறவு இல்லை" என்று சொல்லி ஊர் மடத்தில் யோகத்தில் அமர்ந்தார். ஊர்ப் பெரியோர்கள் வந்து பார்த்து, "இவர் சிவயோகத்தில் நிற்கும் பெரியவர்; இனி இவரை உலக வாழ்வுக்கு மீட்க முடியாது" என்று அவளுக்கு ஆறுதல் சொல்லி அழைத்துச் சென்றனர்.
மறுநாள் தாம் வைத்த இடத்தில் தம் பழைய உடலைத் தேடினார்; அது அங்கே இல்லை. இது ஈசனின் திருவுளம் என்று ஞானத்தால் உணர்ந்தார்: சிவாகமங்களின் பொருளைத் தமிழில் தர வேண்டும் என்பதற்காகவே இறைவன் அந்த உடலை மறைத்தான். திருவாவடுதுறைக் கோயிலுக்கு மேற்கே இருந்த அரச மரத்தின் கீழ் சிவயோகத்தில் அமர்ந்தார். ஆண்டுக்கு ஒரு பாடல் என்று மூவாயிரம் ஆண்டுகள் இருந்து மூவாயிரம் பாடல்களை அருளினார் என்று சேக்கிழார் பாடுகிறார். அந்த மூவாயிரம் தமிழே திருமந்திரம். அதை உலகுக்குத் தந்த பின் அவர் மீண்டும் திருக்கயிலையை அடைந்தார்.
Periya Puranam of Sekkizhar: the story of Thirumoola Nayanar; the Payiram of the ThirumandhiramThe Yogi Who Entered the Body of Moolan
One of the eight Siva yogis who had been taught by Lord Nandi on Mount Kailasa wished to see the sage Agastya on the Pothigai hills, and set out towards the south. He worshipped at Kedaram, Pasupatinatham, Kasi, Srisailam, Kalahasti, Thiruvalangadu, Kanchi and Thillai, and came at last to Thiruvavaduthurai on the bank of the Kaveri. Even after worshipping the Lord there, his heart would not agree to leave the place.
One day, in a grove by the river, he saw a herd of cows standing together and crying. A cowherd named Moolan, from the village of Sathanur, lay dead on the ground. The cows walked round his body, smelt it and shed tears. The yogi's heart was moved by the grief of these creatures that could not speak. He left his own body safely in a hidden place and, by the power of yoga, sent his life into the body of Moolan. Moolan rose. The cows leapt for joy and ran off to graze with their tails in the air.
In the evening the cows walked home on their own, and the yogi followed. When Moolan's wife came near, taking him for her husband, he stepped away, told her there was no bond between them, and sat down in yoga in the village matha. The elders came and looked at him. "This is a great one fixed in the yoga of Siva," they told her gently. "He cannot be brought back to worldly life." And they took her home.
The next day he searched for his old body where he had left it. It was not there. Through his inner knowledge he understood that this was the will of the Lord: Siva had hidden the body so that the meaning of the Saiva Agamas would be given in Tamil. He sat down in Siva yoga under the arasu (peepal) tree to the west of the temple at Thiruvavaduthurai. Sekkizhar sings that he stayed there three thousand years and gave three thousand verses, one for each year. Those three thousand Tamil verses are the Thirumandhiram. When he had given them to the world, he returned to Kailasa.