பகுதி 4 · முல்லைப்பாட்டு · நப்பூதனார்

முல்லைப்பாட்டு 4 · தேம்படு கவுள சிறுகண் யானை

தேம்படு கவுள சிறுகண் யானையோங்குநிலைக் கரும்பொடு கதிர்மிடைந் தியாத்தவயல்விளை யின்குள குண்ணாது நுதறுடைத்தயினுனை மருப்பிற்றங் கையிடைக் கொண்டெனக்கவைமுட் கருவியின் வடமொழி பயிற்றிக்கல்லா விளைஞர் கவளங் கைப்பக்கற்றோய்த் துடுத்த படிவப் பார்ப்பான்முக்கோ லசைநிலை கடுப்ப நற்போரோடா வல்விற் றூணி நாற்றிக்கூடங் குத்திக் கயிறுவாங் கிருக்கைப்
பகிர்

பொருள்

நாற்சந்தியான முற்றத்தே காவலாக நின்ற, மதம் பாய்கின்ற கதுப்பினையும் சிறிய கண்ணையும் உடைய யானை, வளர்கின்ற தன்மையையுடைய கரும்புகளோடே வயலில் விளைந்த நெற்கதிர் இடையே நெருங்கிக் கட்டப்பட்ட சாவியையும் இனிய அதிமதுரத் தழையையும் தின்னாமல், அவற்றால் தன் நெற்றியைத் துடைத்துக் கூர்மையான முனைகளையுடைய தன் கொம்பினிடத்தே தம் கையிடத்தே கொண்டு நின்றன. வடமொழியை அடியில் கல்லாத இளைஞர், யானைப் பேச்சாகிய வடமொழிகளைச் சொல்லிக் கவைத்த முள்ளையுடைய பரிக்கோலாலே கவளத்தைத் தின்னும்படி குத்த, துகிலைக் காவிக்கல்லில் தோய்த்து உடுத்த விரதங்களையுடைய முக்கோலந்தணன் அம்முக்கோலிலே உடையை இட்டு வைத்தாற் போல, அறத்தாற் பொருகின்ற போரில் ஓடாமைக்குக் காரணமான வலிய வில்லைச் சேர ஊன்றி அதிலே தூணிகளைத் தூக்கி,

Meaning

At the crossroads stands the guard elephant, rut trickling, eyes small. It would not eat the sweet cane of the field nor the liquorice leaf bound between the ripening paddy; it only wiped its brow with them and held them up against its sharp-tipped tusks. The youths who never learned the northern tongue shout the words men use to elephants and prod the mouthful with the forked goad; the brahmin of the three staffs, his cloth dipped in ochre, stands like a man who has hung his cloth on his staff; and the strong bow that will not run in a war fought by dharma is planted firm, its quivers hung on it,

சொற்பொருள் Word by word

கவலை முற்றம்
the four-way crossing
தேம்படு கவுள
rut trickling from the temple
சிறுகண் யானை
the small-eyed elephant
ஓங்குநிலைக் கரும்பு
the tall cane
கதிர் மிடைந்து யாத்த
bound among the ripening grain
குளகு
the sweet cane shoot
அதிமதுரத்தழை
the liquorice leaf
நுதல் துடைத்து
wiping its brow
அயில் நுனை மருப்பு
the sharp-tipped tusk
கவைமுட் கருவி
the forked goad
கல்லா விளைஞர்
youths who have not learned
வடமொழி பயிற்றி
shouting the northern words
படிவப் பார்ப்பான்
the ochre-robed brahmin
முக்கோல் அசை நிலை
the stance with the three staffs
ஓடா வல் வில்
the strong bow that does not run
தூணி நாற்றி
planting the quivers

விளக்கம்

பாசறையின் காட்சி: யானை, இளைஞர், அந்தணன், வில்லாளர். ஆனால் கவிதை பெரிய விஷயத்தைச் சொல்கிறது — யானை உண்ண மறுக்கிறது; போர் நினைவில் உள்ளது.

"ஓடா வல் வில்" — ஓடாத வில். அதாவது அறத்தாற் போர் செய்வோர் புறமுதுகிடார். இது போரின் ஒழுக்கத்தை மிகச் சுருக்கமாகச் சொல்லும் சொற்றொடர்.

Explanation

A camp in images: the elephant, the youths, the brahmin, the archers. But the poem is saying something larger — the elephant will not eat; its mind is on war.

"The strong bow that does not run": those who fight by dharma do not turn their backs. War's discipline in one phrase.

கதை

முல்லைப்பாட்டு

அடிகள் 31–40 · நப்பூதனார்

A story

Lines 31–40 · Napputhanar

சிந்தனைக்கு

போரின் ஒழுக்கம் என்பது இருப்பதா, அல்லது கற்பனையா?

To reflect on

Is a discipline in war a real thing, or an imagination?