நெடுநல்வாடை
அடிகள் 31–40 · மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர்
படலைக் கண்ணிப் பரேரெறுழ்த் திணிதோள்முடலை யாக்கை முழுவலி மாக்கள்வண்டுமூசு தேறல் மாந்தி மகிழ்சிறந்துதுவலைத் தண்துளி பேணார் பகலிறந்துஇருகோட்ட டறுவையர் வேண்டுவயின் திரிதரவெள்ளி வள்ளி வீங்கிறைப் பணைத்தோள்மெத்தென் சாயல் முத்துறழ் முறுவல்பூங்குழைக் கமர்ந்த ஏந்தெழில் மழைக்கண்மடவரல் மகளிர் பிடகைப் பெய்தசெவ்வி யரும்பின் பைங்காற் பித்திகத்து
தழை விரவிய மாலையையும் பருத்த அழகினையுடைய வலிய இறுகிய தோளையும், முறுக்குண்ட உடம்பையும், நிரம்பிய மெய்வலியையும் உடைய மிலேச்சர், வண்டுகள் மொய்க்கும் கள்ளை உண்டு மகிழ்ச்சி மிகுந்து, சிறுதுளையாகிய தண்ணிய துளியை அஞ்சாது முன்னும் பின்னும் தொங்கலாக நாலு இட்ட துகிலை உடையவராய்ப் பகற்பொழுது கழிந்த பின்னும் தமக்கு வேண்டிய இடத்தே திரிய, வெளுக்கப்பட்ட சங்கு வளையின் இறுகிய இறையையுடைய மெத்தென்ற பணை போன்ற தோளையும், மெய் முழுதும் கட்புலனாகத் தோன்றும் மெத்தென்ற சாயலையும், முத்தையொத்த பல்லையும், மகரக்குழை பொருந்திய அழகிய குளிர்ந்த கண்ணையும் உடைய மடப்பமுள்ள மகளிர், பூந்தட்டில் இட்ட பசிய காலையுடைய பிச்சியின் அரிய செவ்வியையுடைய அரும்பின் இதழ்கள் பகல் கழிந்து விரியும் மணம் கமழ —
The Mlechchas, with garlands woven through with leaves, heavy and strong, their shoulders hard and their bodies knotted with muscle and full of bodily strength, drink the toddy the bees swarm over and grow merry, and fear no fine cold drizzle; they wrap themselves in a cloth slung fore and aft in four folds and wander where they please after the daylight is gone. And the simple women whose shoulders are like a soft bamboo stem with its tight rings, white as a polished conch, whose whole body shows a soft languor to the eye, whose teeth are like pearls, whose cool eyes are lovely under the earrings — they have set the pale-stemmed pichchi buds in a flower basket, and its choice red petals open after the day is done and give out their scent —
இங்கே இரு உலகங்கள் ஒரே தெருவில் நிற்கின்றன: கள்ளுண்டு திரியும் மிலேச்சர், பூந்தட்டு ஏந்தி நடக்கும் மகளிர். ஒருவர் குளிரை அஞ்சுவதில்லை; மற்றவர் பூவின் மணத்தால் பொழுதை அறிகிறார்.
"பொழுது அறிதல்" — மணி இல்லாத காலத்தில் மலர் மணமே கடிகாரம். இது நேரத்தை உணரும் மிக நுட்பமான சங்க முறை.
Two worlds share one street here: the Mlechchas drinking and wandering, and the women carrying flower baskets. One group does not fear the cold at all; the other reads the hour from a flower's scent.
Telling the time by a blossom is a fine way to know an hour when there are no clocks.
அடிகள் 31–40 · மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர்
Lines 31–40 · Nakkeerar, son of Madurai Kanakkayanar
பூவின் மணத்தால் பொழுதை அறிவது நேரத்தை உணரும் முறையா, அழகு உணர்வா?
Is reading the hour by a flower's scent a way of keeping time, or a way of feeling beauty?