poem 2 · Chidambara Mummanikkovai · Kumaraguruparar
சிதம்பர மும்மணிக்கோவை 2 · நேரிசையாசிரியப்பா
பூமலி கற்பகப் புத்தேள் வைப்பும்நாமநீர் வரைப்பி னானில வளாகமும்ஏனைப் புவனமு மெண்ணீங் குயிரும்தானே வகுத்ததுன் றமருகக் கரமேதனித்தனி வகுத்த சராசரப் பகுதிஅனைத்தையுங் காப்பதுன் னமைத்தபொற் கரமேதோற்றுபு நின்றவத் தொல்லுல கடங்கலும்மாற்றுவ தாரழல் வைத்ததோர் கரமேஈட்டிய வினைப்பய னெவற்றையு மறைத்துநின்றூட்டுவ தாகுநின் னூன்றிய பதமேஅடுத்தவின் னுயிர்கட் களவில்பே ரின்பம்கொடுப்பது முதல்வநின் குஞ்சித பதமேஇத்தொழி லைந்துநின் மெய்த்தொழி லாகப்பாலுண் குழவி பசுங்குடர் பொறாதெனநோயுண் மருந்து தாயுண் டாங்குமன்னுயிர்த் தொகுதிக் கின்னருள் கிடைப்பவையமீன் றளித்த தெய்வக் கற்பின்அருள்சூற் கொண்ட வையரித் தடங்கட்டிருமாண் சாயற் றிருந்திழை காணச்சிற்சபை பொலியத் திருநடம் புரியும்அற்புதக் கூத்தநின் னமுதவாக் களித்தநல்லற நூல்களிற் சொல்லறம் பலசிலஇல்லறந் துறவற்ற மெனச்சிறந் தனவேஅந்நிலை யிரண்டினுண் முன்னது கிளப்பிற்கற்றநூற் றுறைபோய்க் கடிமனைக் கிழவன்நற்குண நிறைந்த கற்புடை மனைவியோடன்பு மருளுந் தாங்கி யின்சொலின்விருந்து புறந்தந் தருந்தவர்ப் பேணிஐவகை வேள்வியு மாற்றி யிவ்வகைநல்லற நிரப்பிப் பல்புகழ் நிறீஇப்பிறன்மனை நயவா னறன்மனை வாழ்க்கைக்குவரையா நாளின் மகப்பேறு குறித்துப்பெருநலந் துய்க்கும் பெற்றித் தன்றேமற்றையது கிளப்பின் மனையற நிரப்பிமுற்றுணர் கேள்வியின் முதுக்குறை வெய்திப்பொருளு மின்பமு மொரீஇ யருளொடுபொறையு மாற்றலு நிறைபே ரொழுக்கமும்வாய்மையுந் தவமுந் தூய்மையுந் தழீஇஓரறி வுயிர்க்கு முறுதுய ரோம்பிக்காலோய் நடைய னாகித் தோலுடுத்தென்பெழு மியாக்கையன் றுன்புறத் துளங்காதுவரையுங் கானு மெய்திச் சருகொடுகானீ ரருந்திக் கடும்பனிக் காலத்துமாநீ ரழுவத் தழுங்கி வேனில்ஐவகை யழலின் மெய்வருந்த வருந்திஇவ்வகை யொழுகு மியல்பிற் றன்றே, அதனால்இந்நிலை யிரண்டு மெம்மனோர்க் கியலாநன்னிலை யாகலி னந்நிலை நிற்றற்குரனு மாற்றலு மின்றி வெருவந்தௌிதனற் றமியனே னரியது பெறுதற்குளதோ நெறியொன் றுணர்த்துமி னீரெனமுத்தலந் தலங்களுண் முத்தித் தலமாஇத்தல முடைத்தெனெ விசைத்தனர் சிலரேஅறிஞராங் குரைத்த வுறுதிக் கட்டுரைஉலகியல் வழக்கும் புலனெறி வழக்குமென்றிருவகை வழக்கினு நிலைபெற் றன்றே, அவற்றுள்ஆரூர்ப் பிறத்த னேர்படி னல்லதுசெயற்கையி னெய்து மியற்கைய தன்றே, அதாஅன்றுகாசியி லிறத்த னோக்கித் தேசம்விட்டறந்தலைத் தந்த வரும்பொரு டாங்கிப்பிறன்பொருள் கொள்ளாப் பேரறம் பூண்டுகழிபெருங் கான நீங்கி வழியிடைத்தீப்பசிக் கிரங்கி நோய்ப்பனிக் கொதுங்கிப்பல்பிணிக் குடைந்து செல்லுங் காலத்திடைச்சுரத் திறவா தின்னுயிர் தாங்கிக்கிடைத்தன னாயி னடுத்தநல் லொழுக்கமோடுடல்விடு காறுமத் தடநகர் வைகிமுடிவது கடைபோக முடிவதோ வரிதே, அதனால்சிற்றுயிர்க் கிரங்கும் பெரும்பற்றப் புலியூர்உற்றநின் றிருக்கூத் தொருகா னோக்கிப்பரகதி பெறுவான் றிருமுன் பெய்தப்பெற்றன னளியனேன் பற்றில னாயினும்அன்பிலை கொடியையென் றருளா யல்லைநின்பதம் வழங்குதி நிமலவென் றனக்கேமருந்துண் வேட்கையன் மனமகிழ்ந் துண்ணினும்அருந்துழி யொருவ னருவருப் புறீஇத்தன்முகஞ் சுளித்துத் தலைநடுக் குற்றுக்கண்ணீர் வீழ்த்துக் கலுழ்ந்தனன் மாந்தினும்வாய்ப்புகு மாயினம் மருந்திரு வருக்கும்தீப்பிணி மாற்றுத றிண்ணமே யன்றிநொதுமலும் பகையும் போக்கி யொருபொருள்விழுத்தகு கேண்மையோர்க் குதவல்வழக்குமன் றைய மன்றுடை யோர்க்கே.