song 28 · Madurai Meenakshi Ammai Kuram · Kumaraguruparar
மதுரை மீனாட்சியம்மை குறம் 28 · எண்சீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்
கொண்டுவா வம்மேகை கொண்டுவா வம்மேகொழுங்கனக நவமணிக ளளைந்திடுமுன் கையேவண்டுசுலா மலர்கொய்ய வருந்திடுமுன் கையேவருந்தினர்க்கு நவநிதியுஞ் சொரிந்திடுமுன் கையேபுண்டரிகம் பூத்தழகு பொலிந்திடுமுன் கையேபுழுகுறுநெய்ச் சொக்கர்புயந் தழுவிடுமுன் கையேஅண்டர்தநா யகியெங்கண் மதுரைநா யகியையங்கயற்கண் ணாயகியைக் கும்பிடுமுன் கையே.