Pathikam 651 · Thevaram · Thirugnanasambandar, Thirunavukkarasar, Sundarar

திருப்புள்ளிருக்குவேளூர் – திருத்தாண்டகம் · 6.54

1. ஆண்டானை அடியேனை ஆளாக் கொண்டு௿ அடியோடு முடியயன்மா லறியா வண்ணம்௿ நீண்டானை நெடுங்களமா நகரான் றன்னை௿ நேமிவான் படையால்நீ ளுரவோ னாகங்௿ கீண்டானைக் கேதாரம் மேவி னானைக்௿ கேடிலியைக் கிளர்பொறிவாள் அரவோ டென்பு௿ பூண்டானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்௿ போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.2. சீர்த்தானைச் சிறந்தடியேன் சிந்தை யுள்ளே ௿ திகழ்ந்தானைச் சிவன்றன்னைத் தேவ தேவைக்௿ கூர்த்தானைக் கொடுநெடுவேற் கூற்றந் தன்னைக் ௿ குரைகழலாற் குமைத்துமுனி கொண்ட அச்சம்௿ பேர்த்தானைப் பிறப்பிலியை இறப்பொன் றில்லாப் ௿ பெம்மானைக் கைம்மாவி னுரிவை பேணிப்௿ போர்த்தானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்௿ போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.3. பத்திமையாற் பணிந்தடியேன் றன்னைப் பன்னாட்௿ பாமாலை பாடப் பயில்வித் தானை௿ எத்தேவு மேத்தும் இறைவன் றன்னை௿ எம்மானை என்னுள்ளத் துள்ளே யூறும்௿ அத்தேனை அமுதத்தை ஆவின் பாலை௿ அண்ணிக்குந் தீங்கரும்பை அரனை ஆதிப்௿ புத்தேளைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்௿ போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.4. இருளாய உள்ளத்தி னிருளை நீக்கி௿ இடர்பாவங் கெடுத்தேழை யேனை யுய்யத்௿ தெருளாத சிந்தைதனைத் தெருட்டித் தன்போற்௿ சிவலோக நெறியறியச் சிந்தை தந்த௿ அருளானை ஆதிமா தவத்து ளானை௿ ஆறங்கம் நால்வேதத் தப்பால் நின்ற௿ பொருளானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்௿ போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.5. மின்னுருவை விண்ணகத்தி லொன்றாய் மிக்கு ௿ வீசுங்கால் தன்னகத்தில் இரண்டாய்ச் செந்தீத்௿ தன்னுருவின் மூன்றாய்த்தாழ் புனலின் நான்காய்த்௿ தரணிதலத் தஞ்சாகி யெஞ்சாத் தஞ்ச௿ மன்னுருவை வான்பவளக் கொழுந்தை முத்தை௿ வளரொளியை வயிரத்தை மாசொன் றில்லாப்௿ பொன்னுருவைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்௿ போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.6. அறையார்பொற் கழலார்ப்ப அணியார் தில்லை ௿ அம்பலத்துள் நடமாடும் அழகன் றன்னைக்௿ கறையார்மூ விலைநெடுவேற் கடவுள் தன்னைக்௿ கடல்நாகைக் காரோணங் கருதி னானை௿ இறையானை என்னுள்ளத் துள்ளே விள்ளா ௿ திருந்தானை ஏழ்பொழிலுந் தாங்கி நின்ற௿ பொறையானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்௿ போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.7. நெருப்பனைய திருமேனி வெண்ணீற் றானை௿ நீங்காதென் னுள்ளத்தி னுள்ளே நின்ற௿ விருப்பவனை வேதியனை வேத வித்தை௿ வெண்காடும் வியன்துருத்தி நகரும் மேவி௿ இருப்பவனை இடைமருதோ டீங்கோய் நீங்கா ௿ இறையவனை எனையாலுங் கயிலை யென்னும்௿ பொருப்பவனைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்௿ போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.8. பேரா யிரம்பரவி வானோ ரேத்தும் ௿ பெம்மானைப் பிரிவிலா அடியார்க் கென்றும்௿ வாராத செல்வம் வருவிப் பானை௿ மந்திரமுந் தந்திரமும் மருந்து மாகித்௿ தீராநோய் தீர்த்தருள வல்லான் றன்னைத்௿ திரிபுரங்கள் தீயெழத்திண் சிலைகைக் கொண்ட௿ போரானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்௿ போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.9. பண்ணியனைப் பைங்கொடியாள் பாகன் றன்னைப்௿ படர்சடைமேற் புனல்கரந்த படிறன் றன்னை௿ நண்ணியனை யென்னாக்கித் தன்னா னானை௿ நான்மறையின் நற்பொருளை நளிர்வெண் டிங்கள்௿ கண்ணியனைக் கடியநடை விடையொன் றேறுங்௿ காரணனை நாரணனைக் கமலத் தோங்கும்௿ புண்ணியனைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்௿ போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.10. இறுத்தானை இலங்கையர்கோன் சிரங்கள் பத்தும்௿ எழுநரம்பின் இன்னிசைகேட் டின்புற் றானை௿ அறுத்தானை அடியார்தம் அருநோய் பாவம்௿ அலைகடலில் ஆலால முண்டு கண்டங்௿ கறுத்தானைக் கண்ணழலாற் காம னாகங்௿ காய்ந்தானைக் கனன்மழுவுங் கலையு மங்கை௿ பொறுத்தானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்௿ போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.
Share