Pathikam 676 · Thevaram · Thirugnanasambandar, Thirunavukkarasar, Sundarar

திருத்தலையாலங்காடு – திருத்தாண்டகம்௿ · 6.79

1. தொண்டர்க்குத் தூநெறியாய் நின்றான் றன்னைச்௿ சூழ்நரகில் வீழாமே காப்பான் றன்னை௿ அண்டத்துக் கப்பாலைக் கப்பா லானை௿ ஆதிரைநா ளாதரித்த அம்மான் றன்னை௿ முண்டத்தின் முளைத்தெழுந்த தீயா னானை௿ மூவுருவத் தோருருவாய் முதலாய் நின்ற௿ தண்டத்திற் றலையாலங் காடன் றன்னைச்௿ சாராதே சாலநாள் போக்கி னேனே.2. அக்கிருந்த அரையானை அம்மான் றன்னை௿ அவுணர்புர மொருநொடியி லெரிசெய் தானைக்௿ கொக்கிருந்த மகுடத்தெங் கூத்தன் றன்னைக்௿ குண்டலஞ்சேர் காதானைக் குழைவார் சிந்தை௿ புக்கிருந்து போகாத புனிதன் றன்னைப்௿ புண்ணியனை எண்ணருஞ்சீர்ப் போக மெல்லாந்௿ தக்கிருந்த தலையாலங் காடன் றன்னைச்௿ சாராதே சாலநாள் போக்கி னேனே.3. மெய்த்தவத்தை வேதத்தை வேத வித்தை௿ விளங்கிளமா மதிசூடும் விகிர்தன் றன்னை௿ எய்த்தவமே உழிதந்த ஏழை யேனை௿ இடர்க்கடலில் வீழாமே யேற வாங்கிப்௿ பொய்த்தவத்தா ரறியாத நெறிநின் றானைப்௿ புனல்கரந்திட் டுமையொடொரு பாகம் நின்ற௿ தத்துவனைத் தலையாலங் காடன் றன்னைச்௿ சாராதே சாலநாள் போக்கி னேனே.4. சிவனாகித் திசைமுகனாய்த் திருமா லாகிச்௿ செழுஞ்சுடராய்த் தீயாகி நீரு மாகிப்௿ புவனாகிப் புவனங்க ளனைத்து மாகிப்௿ பொன்னாகி மணியாகி முத்து மாகிப்௿ பவனாகிப் பவனங்க ளனைத்து மாகிப்௿ பசுவேறித் திரிவானோர் பவனாய் நின்ற௿ தவனாய தலையாலங் காடன் றன்னைச்௿ சாராதே சாலநாள் போக்கி னேனே.5. 789கங்கையெனுங் கடும்புனலைக் கரந்தான் றன்னைக்௿ காமருபூம் பொழிற்கச்சிக் கம்பன் றன்னை௿ அங்கையினில் மான்மறியொன் றேந்தி னானை௿ ஐயாறு மேயானை ஆரூ ரானைப்௿ பங்கமிலா அடியார்க்குப் பரிந்தான் றன்னைப்௿ பரிதிநிய மத்தானைப் பாசூ ரானைச்௿ சங்கரனைத் தலையாலங் காடன் றன்னைச்௿ சாராதே சாலநாள் போக்கி னேனே.6. விடந்திகழும் அரவரைமேல் வீக்கி னானை௿ விண்ணவர்க்கு மெண்ணரிய அளவி னானை௿ அடைந்தவரை அமருலக மாள்விப் பானை௿ அம்பொன்னைக் கம்பமா களிறட் டானை௿ மடந்தையொரு பாகனை மகுடந் தன்மேல்௿ வார்புனலும் வாளரவும் மதியும் வைத்த௿ தடங்கடலைத் தலையாலங் காடன் றன்னைச்௿ சாராதே சாலநாள் போக்கி னேனே.7. விடையேறிக் கடைதோறும் பலிகொள் வானை௿ வீரட்டம் மேயானை வெண்ணீற் றானை௿ முடைநாறு முதுகாட்டி லாட லானை௿ முன்னானைப் பின்னானை அந்நா ளானை௿ உடையாடை யுரிதோலே உகந்தான் றன்னை௿ உமையிருந்த பாகத்து ளொருவன் றன்னைச்௿ சடையானைத் தலையாலங் காடன் றன்னை௿ சாராதே சாலநாள் போக்கி னேனே.8. கரும்பிருந்த கட்டிதனைக் கனியைத் தேனைக்௿ கன்றாப்பின் நடுதறியைக் காறை யானை௿ இரும்பமர்ந்த மூவிலைவே லேந்தி னானை௿ என்னானைத் தென்னானைக் காவான் றன்னைச்௿ சுரும்பமரும் மலர்க்கொன்றை சூடி னானைத்௿ தூயானைத் தாயாகி உலகுக் கெல்லாந்௿ தரும்பொருளைத் தலையாலங் காடன் றன்னைச்௿ சாராதே சாலநாள் போக்கி னேனே.9. பண்டளவு நரம்போசைப் பயனைப் பாலைப்௿ படுபயனைக் கடுவெளியைக் கனலைக் காற்றைக்௿ கண்டளவிற் களிகூர்வார்க் கெளியான் றன்னைக்௿ காரணனை நாரணனைக் கமலத் தோனை௿ எண்டளவி லென்னெஞ்சத் துள்ளே நின்ற௿ எம்மானைக் கைம்மாவி னுரிவை பேணுந்௿ தண்டரனைத் தலையாலங் காடன் றன்னைச்௿ சாராதே சாலநாள் போக்கி னேனே.10. கைத்தலங்கள் இருபதுடை அரக்கர் கோமான்௿ கயிலைமலை அதுதன்னைக் கருதா தோடி௿ முத்திலங்கு முடிதுளங்க வளைக ளெற்றி௿ முடுகுதலுந் திருவிரலொன் றவன்மேல் வைப்பப்௿ பத்திலங்கு வாயாலும் பாடல் கேட்டுப்௿ பரிந்தவனுக் கிராவணனென் றீந்த நாம௿ தத்துவனைத் தலையாலங் காடன் றன்னைச்௿ சாராதே சாலநாள் போக்கி னேனே.
Share