சுந்தர காண்டம் · சம்புமாலி வதைப் படலம் · பாடல் 42 / 51
சம்புமாலி போர்க்கு விரைதல்
காற்றின் கடிய கலினம் புரவி நிருதர் களத்து உக்கார்;ஆற்றுக் குருதி நிணத்தோடு அடுத்த அள்ளல் பெரும் கொள்ளைச்சேற்றில் செல்லா தேரின் ஆழி, ஆழும்; நிலை தேராவீற்றுச் செல்லும் வெளியோ இல்லை, அளியன் விரைகின்றான்