Work 8 / 10 · Nine poets

Purudothama Nambi

புருடோத்தம நம்பி திருவிசைப்பா · Purudothama Nambi

22 பாடல்கள்; புருடோத்தம நம்பி பாடிய பதிகங்கள்.

22 verses by Purudothama Nambi.

Share

அறிமுகம்

புருடோத்தம நம்பி பாடிய இருபத்திரண்டு பாடல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன; பாடல்கள் தொடர்ந்து வருகின்றன.

Introduction

Twenty-two verses by Purudothama Nambi are gathered here; the verses run on in sequence.

பாடல்களும் பொருளும் The verses and their meaning

1 Verse 257
வாரணி நறுமலர் வண்டு கிண்டுபஞ்சமம் செண்பக மாலைமாலைவாரணி வனமுலை மெலியும் வண்ணம்வந்து வந்திலைநம்மை மயக்குமாலோசீரணி மணிதிகழ் மாடம் ஓங்குதில்லையம்பலத்(து) எங்கள் செல்வன் வாரான்ஆரெனை அருள்புரிந்(து) அஞ்சல் என்பார்ஆவியின் பரம்என்றன் ஆதரவே.
Word meanings, reflection and sharing
2 Verse 258
ஆவியின் பரம்என்றன் ஆதரவும்அருவினை யேனைவிட்டு அம்மஅம்மபாவிவன் மனமிது பையவே போய்ப்பனிமதிச் சடையான் பாலதாலோநீவியும் நெகிழ்ச்சியும் நிறையழிவும்நெஞ்சமும் தஞ்சமி லாமையாலேஆவியின் வருத்தம் இதாரறிவார்அம்பலத்(து) அருள்நடம் ஆடுவானே.
Word meanings, reflection and sharing
3 Verse 259
அம்பலத் தருள்நடம் ஆடவேயும்யாதுகொல் விளைவதென்(று) அஞ்சிநெஞ்சம்உம்பர்கள்வன்பழி யாளர்முன்னேஊட்டினர் நஞ்சைஎன் றேயும் உய்யேன்வன்பல படையுடைய பூதஞ்சூழவானவர் கணங்களை மாற்றியாங்கேஎன்பெரும் பயலமை தீரும்வண்ணம்எழுந்தரு ளாய்எங்கள் வீதியூடே !
Word meanings, reflection and sharing
4 Verse 260
எழுந்தருளாய் எங்கள் வீதியூடேஏதமில் முனிவரோ(டு) எழுந்தஞானக்கொழுந்தது வாகிய கூத்தனேநின்குழையணி காதினில் மாத்திரையும்செழுந்தட மலர்புரை கண்கள் முன்றும்செங்கனி வாயும்என் சிந்தைவெளவஅழுந்தும்என் ஆருயிர்க்(கு) என்செய் கேனோ?அரும்புனல் அலமரும் சடையினானே !
Word meanings, reflection and sharing
5 Verse 261
அரும்புனல் அலமரும் சடையி னானைஅமரர்கள் அடிபணிந்து அரற்ற அந்நாள்பெரும்புரம் எரிசெய்த சிலையின் வார்த்தைபேசவும் நையும் என் பேதை நெஞ்சில்கருந்தட மலர்புரை கண்ட வண்டார்காரிகை யார்முன்(பு)என் பெண்மை தோற்றேன்திருந்திய மலரடி நசையி னாலேதில்லையம் பலத்தெங்கள் தேவ தேவே.
Word meanings, reflection and sharing
6 Verse 262
தில்லையம் பலத்தெங்கள் தேவ தேவைத்தேறிய அந்தணர் சிந்தை செய்யும்எல்லைய தாகிய எழில்கொள் சோதிஎன்னுயிர் காவல்கொண் டிருந்த எந்தாய்பல்லையார் பகந்தலை யோ(டு) இடறிப்பாதமென் மலரடி நோவ நீபோய்அல்லினில் அருநடம் ஆடில் எங்கள்ஆருயிர் காவலிங்(கு) அரிது தானே.
Word meanings, reflection and sharing
7 Verse 263
ஆருயிர் காவலிங்(கு) அருமை யாலேஅந்தணர் மதலைநின் அடிபணியக்கூர்நுனை வேற்படைக்கூற்றம் சாயக்குரைகழல் பணிகொள மலைந்த தென்றால்ஆரனி அமரர்கள் குறைவி லாதார்அவரவர் படுதுயர் களைய நின்றசீருயி ரேஎங்கள் தில்லை வாணா !சேயிழை யார்க்கினி வாழ்வரிதே.
Word meanings, reflection and sharing
8 Verse 264
சேயிழை யார்க்கினி வாழ்வரிதுசிற்றம் பலத்தெங்கள் செல்வ னேநீதாயினும் மிகநல்லை என்றடைந்தேன்தனிமையை நினைகிலை சங்க ராவுன்பாயிரம் புலியதள் இன்னுடையும்பையமேல் எடுத்தபொற் பாத மும்கண்(டு)ஏயிவல் இழந்தது சங்கம் ஆவாஎங்களை ஆளுடை ஈச னேயோ.
Word meanings, reflection and sharing
9 Verse 265
எங்களை ஆளுடை ஈசனையோஇளமுலை முகம்நெக முயங்கி நின்பொற்பங்கயம் புரைமுகம் நோக்கி நோக்கிப்பனிமதி நிலவதென் மேற்படரச்செங்கயல் புரைகண்ணி மார்கள் முன்னேதிருச்சிற்றம் பலமுட னேபுகுந்துஅங்குன பணிபல செய்து நாளும்அருள்பெறின் அகலிடத் திருக்கலாமே.
Word meanings, reflection and sharing
10 Verse 266
அருள்பெறின் அகலிடத்(து) இருக்கலா மென்றுஅமரர்கள் தலைவனும் அயனும் மாலும்இருவரும் அறிவுடையாரின் மிக்கார்ஏத்துகின் றார் இன்னம் எங்கள்கூத்தைமருள்படு மழலைமென் மொழிவுமையாள்கணவனை வல்வினை யாட்டி யேனான்அருள்பெற அலமரும் நெஞ்சம் ஆவாஆசையை அளவறுத் தார்இங் காரே?
Word meanings, reflection and sharing
11 Verse 267
ஆசையை அளவறுத் தார்இங் காரே?அம்பலத்(து) அருநடம் ஆடு வானைவாசநன் மலரணி குழல்மடவார்வைகலும் கலந்தெழு மாலைப் பூசல்மாசிலா மறைபல ஓது நாவன்வன்புரு டோத்தமன் கண்டு ரைத்தவாசக மலர்கள் கொண் டேத்த வல்லார்மலைமகள் கணவனை அணைவர் தாமே.
Word meanings, reflection and sharing
12 Verse 268
வானவர்கள் வேண்ட வளர்நஞ்சை உண்டார்தாம்ஊனமிலா என்கை ஒளிவளைகள் கொள்வாரோ?தேனல்வரி வண்டறையும் தில்லைசிற்றம்பலவர்நானமரோ என்னாதே நாடகமே ஆடுவரே.
Word meanings, reflection and sharing
13 Verse 269
ஆடிவரும் கார்அரவும் ஐம்மதியம் பைங்கொன்றைசூடிவருமா கண்டேன் தோள்வளைகள் தோற்றாலும்தேடியிமை யோர்பரவும் தில்லைசிற்றம் பலவர்ஆடிவரும் போதருகே நிற்கவுமே ஒட்டாரே.
Word meanings, reflection and sharing
14 Verse 270
ஒட்டா வகைஅவுணர் முப்பரங்கள் ஓர்அம்பால்பட்டாங்(கு) அழல்விழுங்க எய்துகந்த பண்பினார்சிட்டார் மறையோவாத் தில்லைசிற்றம் பலவர்கொட்டா நடமாடக் கோல்வளைகள் கொள்வாரே.
Word meanings, reflection and sharing
15 Verse 271
ஆரே இவைபடுவார் ஐயங் கொளவந்துபோரேடி என்று புருவம் இடுகின்றார்தேரார் விழவோவாத் தில்லைசிற் றம்பலவர்தீராநோய் செய்வாரை ஓக்கின்றார் காணீரே.
Word meanings, reflection and sharing
16 Verse 272
காணீரே என்னுடைய கைவளைகள் கொண்டார்தாம்சேணார் மணிமாடத் தில்லைசிற் றம்பலவர்பூணார் வனமுலைமெல் பூஅம்பால் காமவேன்ஆணாடு கின்றவா கண்டும் அருளாரே.
Word meanings, reflection and sharing
17 Verse 273
ஏயிவரே வானவர்க்கும் வானவரே என்பாரால்தாயிவரே எல்லார்க்கும் தந்தையுமாம் என்பாரால்தேய்மதியம் சூடிய தில்லைச் சிற்றம் பலவர்வாயினைக் கேட்டறிவார் வையகத்தார் ஆவாரே.
Word meanings, reflection and sharing
18 Verse 274
ஆவா ! இவர்தம் திருவடிகொண்டு அந்தகன்தன்மூவா உடலழியக் கொன்றுகந்த முக்கண்ணர்தேவா மறைபயிலும் தில்லைச்சிற்றம் பலவர்கோவா இனவளைகள் கொள்வாரோ என்னையே.
Word meanings, reflection and sharing
19 Verse 275
என்னை வலிவாரார் என்ற இலங்கையர் கோன்மன்னும் முடிகள் நெரித்த மணவாளர்செந்நெல் விளைகழனித் தில்லைச் சிற்றம்பலவர்முன்னந்தான் கண்டறிவார் ஒவ்வார் இம் முத்தரே.
Word meanings, reflection and sharing
20 Verse 276
முத்தர் முதுபகலே வந்தென்றன் இல்புகுந்துபத்தர் பலியிடுக என்றெங்கும் பார்க்கின்றார்சித்தர் கணம்பயிலும் தில்லைச்சிற்றம் பலவர்கைத்தலங்கள் வீசிநின் றாடுங்கால் நோக்காரே.
Word meanings, reflection and sharing
21 Verse 277
நோக்காத தன்மையால் நோக்கிலோம் யாமென்றுமாற்காழி ஈந்து மலரோனை நிந்தித்துச்சேக்காத லித்தேறும் தில்லைச்சிற்றம்பலவர்ஊர்க்கேவந்(து) என்வளைகள் கொள்வாரோ ஒண்ணுதலீர்!
Word meanings, reflection and sharing
22 Verse 278
ஒண்ணுதலி காரணமா உம்பர் தொழுதேத்தும்கண்ணுதலான் தன்னைப் புருடோத்தமன் சொன்னபண்ணுதலைப் பத்தும் பயின்றாடிப் பாடினார்எண்ணுதலைப் பட்டங்கு இனிதா இருப்பாரே. 11
Word meanings, reflection and sharing
கதை

கோயில் · வாரணி

புருடோத்தம நம்பி திருவிசைப்பா · கோயில் · வாரணி

சிந்தனைக்கு

தொடர்ந்து பாடும் பக்தி, எண்ணிக்கையில் அல்ல, நினைவில் நிற்கிறது.

To reflect on

Continuous praise is measured in memory, not in number.