Kadai 28 · Manimekalai · Seethalai Sathanar

சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை

'நவை அறு நன் பொருள் உரைமினோ' எனசமயக் கணக்கர் தம் திறம் சார்ந்துவைதிக மார்க்கத்து அளவை வாதியைஎய்தினள் எய்தி 'நின் கடைப்பிடி இயம்பு' என'வேத வியாதனும் கிருதகோடியும்ஏதம் இல் சைமினி எனும் இவ் ஆசிரியர்பத்தும் எட்டும் ஆறும் பண்புறத்தம் தம் வகையால் தாம் பகர்ந்திட்டனர்காண்டல் கருதல் உவமம் ஆகமம்ஆண்டைய அருத்தாபத்தியோடு இயல்புஐதிகம் அபாவம் மீட்சி ஒழிவறிவுஎய்தி உண்டாம் நெறி என்று இவை தம்மால்பொருளின் உண்மை புலங்கொளல் வேண்டும்மருள் இல் காட்சி ஐ வகை ஆகும்கண்ணால் வண்ணமும் செவியால் ஓசையும்நண்ணிய மூக்கால் நாற்றமும் நாவால்சுவையும் மெய்யால் ஊறும் எனச் சொன்னஇவை இவை கண்டு கேட்டு உயிர்த்து உண்டு உற்றுதுக்கமும் சுகமும் எனத் துயக்கு அற அறிந்துஉயிரும் வாயிலும் மனமும் ஊறு இன்றிபயில் ஒளியொடு பொருள் இடம் பழுது இன்றிசுட்டல் திரிதல் கவர்கோடல் தோன்றாதுகிட்டிய தேசம் நாமம் சாதிகுணம் கிரியையின் அறிவது ஆகும்கருத்து அளவு ஆவதுகுறிக்கொள் அனுமானத்து அனுமேயத்தகைமை உணரும் தன்மையது ஆகும்மூ வகை உற்று அது பொது எச்சம் முதல் ஆம்பொது எனப்படுவது சாதன சாத்தியம்இவை அந்நுவயம் இன்றாய் இருந்தும்கடம் திகழ் யானைக் கான ஒலி கேட்டோன்உடங்கு "எழில் யானை அங்கு உண்டு" என உணர்தல்எச்சம் என்பது வெள்ள ஏதுவினால்நிச்சயித்து அத் தலை மழை நிகழ்வு உரைத்தல்முதல் என மொழிவது கருக்கொள் முகில் கண்டு"இது மழை பெய்யும் என இயம்பிடுதல்என்னும் ஏதுவின் ஒன்று முக் காலம்தன்னில் ஒன்றில் சார்ந்து உளதாகிமண்ட உயிர் முதல் மாசு இன்றாகிகாண்டல் பொருளால் கண்டிலது உணர்தல்உவமம் ஆவது ஒப்புமை அளவை"கவய மா ஆப் போலும்" எனக் கருதல்ஆகம அளவை அறிவன் நூலால்"போக புவனம் உண்டு" எனப் புலங்கொளல்அருத்தாபத்தி "ஆய்க்குடி கங்கைஇருக்கும்" என்றால் கரையில் என்று எண்ணல்இயல்பு யானைமேல் இருந்தோன் தோட்டிற்குஅயல் ஒன்று ஈயாது அதுவே கொடுத்தல்ஐதிகம் என்பது உலகு மறை "இம் மரத்துஎய்தியது ஓர் பேய் உண்டு" எனத் தௌிதல்அபாவம் என்பது இன்மை "ஓர் பொருளைத்தவாது அவ் இடத்துத் தான் இலை" என்றல்மீட்சி என்பது "இராமன் வென்றான்" எனமாட்சி இல் இராவணன் தோற்றமை மதித்தல்உள்ள நெறி என்பது "நாராசத் திரிவில்கொள்ளத் தகுவது காந்தம்" எனக் கூறல்எட்டு உள பிரமாண ஆபாசங்கள்சுட்டுணர்வொடு திரியக் கோடல் ஐயம்தேராது தௌிதல் கண்டு உணராமைஎய்தும் இல் வழக்கு உணர்ந்ததை உணர்தல்நினைப்பு என நிகழ்வ சுட்டுணர்வு எனப்படுவதுஎனைப் பொருள் உண்மை மாத்திரை காண்டல்திரியக் கோடல் ஒன்றை ஒன்று என்றல்விரி கதிர் இப்பியை வெள்ளி என்று உணர்தல்ஐயம் என்பது ஒன்றை நிச்சயியாமையல் தறியோ? மகனோ? என்றல்தேராது தௌிதல் செண்டு வௌியில்ஓராது தறியை மகன் என உணர்தல்கண்டு உணராமை கடு மாப் புலி ஒன்றுஅண்டலை முதலிய கண்டும் அறியாமைஇல் வழக்கு என்பது முயற்கோடு ஒப்பனசொல்லின் மாத்திரத்தால் கருத்தில் தோன்றல்உணர்ந்ததை உணர்தல் உறு பனிக்குத் தீப்புணர்ந்திடல் மருந்து எனப் புலம் கொள நினைத்தல்நினைப்பு எனப்படுவது காரணம் நிகழாதுநினக்கு இவர் தாயும் தந்தையும் என்றுபிறர் சொலக் கருதல் இப் பெற்றிய அளவைகள்பாங்குறும் உலோகாயதமே பௌத்தம்சாங்கியம் நையாயிகம் வைசேடிகம்மீமாஞ்சகம் ஆம் சமய ஆசிரியர்தாம் பிருகற்பதி சினனே கபிலன்அக்கபாதன் கணாதன் சைமினிமெய்ப்பிரத்தியம் அனுமானம் சாத்தம்உவமானம் அருத்தாபத்தி அபாவம்இவையே இப்போது இயன்று உள அளவைகள்'என்றவன் தன்னை விட்டு 'இறைவன் ஈசன்' எனநின்ற சைவ வாதி நேர்படுதலும்'பரசும் நின் தெய்வம் எப்படித்து?' என்ன'இரு சுடரோடு இயமானன் ஐம் பூதம் என்றுஎட்டு வகையும் உயிரும் யாக்கையுமய்க்கட்டி நிற்போனும் கலை உருவினோனும்படைத்து விளையாடும் பண்பினோனும்துடைத்துத் துயர் தீர் தோற்றத்தோனும்தன்னில் வேறு தான் ஒன்று இலோனும்அன்னோன் இறைவன் ஆகும்' என்று உரைத்தனன்'பேர் உலகு எல்லாம்' பிரம வாதி 'ஓர்தேவன் இட்ட முட்டை' என்றனன்காதல் கொண்டு கடல்வணன் புராணம்ஓதினன் 'நாரணன் காப்பு' என்று உரைத்தனன்'கற்பம் கை சந்தம் கால் எண் கண்தெற்றென் நிருத்தம் செவி சிக்கை மூக்குஉற்ற வியாகரணம் முகம் பெற்றுச்சார்பின் தோன்றா ஆரண வேதக்குஆதி அந்தம் இல்லை அது நெறி' எனும்வேதியன் உரையின் விதியும் கேட்டு'மெய்த்திறம் வழக்கு என விளம்புகின்றஎத் திறத்தினும் இசையாது இவர் உரை' எனஆசீவக நூல் அறிந்த புராணனை'பேசும் நின் இறை யார்? நூற்பொருள் யாது?' என'எல்லை இல் பொருள்களில் எங்கும் எப்பொழுதும்புல்லிக் கிடந்து புலப்படுகின்றவரம்பு இல் அறிவன் இறை நூற்பொருள்கள் ஐந்துஉரம் தரும் உயிரோடு ஒரு நால் வகை அணுஅவ் அணு உற்றும் கண்டும் உணர்ந்திடப்பெய் வகை கூடிப் பிரிவதும் செய்யும்நிலம் நீர் தீ காற்று என நால் வகையினமலை மரம் உடம்பு எனத் திரள்வதும் செய்யும்வெவ்வேறு ஆகி விரிவதும் செய்யும்அவ் வகை அறிவது உயிர் எனப் படுமேவற்பம் ஆகி உறும் நிலம் தாழ்ந்துசொற்படு சீதத்தொடு சுவை உடைத்தாய்இழினென நிலம் சேர்ந்து ஆழ்வது நீர் தீத்தெறுதலும் மேல் சேர் இயல்பும் உடைத்து ஆம்காற்று விலங்கி அசைத்தல் கடன் இவைவேற்று இயல்பு எய்தும் விபரீதத்தால்ஆதி இல்லாப் பரமாணுக்கள்தீதுற்று யாவதும் சிதைவது செய்யாபுதிதாய்ப் பிறந்து ஒன்று ஒன்றில் புகுதாமுது நீர் அணு நில அணுவாய்த் திரியாஒன்று இரண்டாகிப் பிளப்பதும் செய்யாஅன்றியும் அவல்போல் பரப்பதும் செய்யாஉலாவும் தாழும் உயர்வதும் செய்யும்குலாம் மலை பிறவாக் கூடும் பலவும்பின்னையும் பிரிந்து தம் தன்மைய ஆகும்மன்னிய வயிரமாய்ச் செறிந்து வற்பமும் ஆம்வேய் ஆய்த் துளைபடும் பொருளா முளைக்கும்தேயா மதி போல் செழு நில வரைப்பு ஆம்நிறைந்த இவ் அணுக்கள் பூதமாய் நிகழின்குறைந்தும் ஒத்தும் கூடா வரிசையின்ஒன்று முக்கால் அரை கால் ஆய் உறும்துன்று மிக்கதனால் பெயர் சொலப்படுமேஇக் குணத்து அடைந்தால் அல்லது நிலன் ஆய்ச்சிக்கென்பதுவும் நீராய் இழிவதும்தீயாய்ச் சுடுவதும் காற்றாய் வீசலும்ஆய தொழிலை அடைந்திடமாட்டாஓர் அணுத் தெய்வக் கண்ணோர் உணர்குவர்தேரார் பூதத் திரட்சியுள் ஏனோர்மாலைப் போதில் ஒரு மயிர் அறியார்சாலத் திரள் மயிர் தோற்றுதல் சாலும்கருமம் பிறப்பும் கரு நீலப் பிறப்பும்பசும்ம் பிறப்பும் செம்ம் பிறப்பும்பொன்ன் பிறப்பும் வெண்ண் பிறப்பும்என்று இவ் ஆறு பிறப்பினும் மேவிபண்புறு வரிசையின் பாற்பட்டுப் பிறந்தோர்கழி வெண் பிறப்பில் கலந்து வீடு அணைகுவர்அழியல் வேண்டார் அது உறற்பாலார்இது செம்போக்கின் இயல்பு இது தப்பும்அது மண்டலம் என்று அறியல் வேண்டும்பெறுதலும் இழத்தலும் இடையூறு உறுதலும்உறும் இடத்து எய்தலும் துக்க சுகம் உறுதலும்பெரிது அவை நீங்கலும் பிறத்தலும் சாதலும்கருவில் பட்ட பொழுதே கலக்கும்இன்பமும் துன்பமும் இவையும் அணு எனத் தகும்முன் உள ஊழே பின்னும் உறுவிப்பதுமற்கலி நூலின் வகை இது' என்னசொல் தடுமாற்றத் தொடர்ச்சியை விட்டுநிகண்ட வாதியை 'நீ உரை நின்னால்புகழும் தலைவன் யார்? நூற்பொருள் யாவை,அப் பொருள் நிகழ்வும் கட்டும் வீடும்மெய்ப்பட விளம்பு' என விளம்பல் உறுவோன்'இந்திரர் தொழப்படும் இறைவன் எம் இறைவன்தந்த நூற்பொருள் தன்மாத்திகாயமும்அதன்மாத்திகாயமும் கால ஆகாயமும்தீது இல் சீவனும் பரமாணுக்களும்நல்வினையும் தீவினையும் அவ் வினையால்செய்வுறு பந்தமும் வீடும் இத் திறத்தஆன்ற பொருள் தன் தன்மையது ஆயும்தோன்று சார்வு ஒன்றின் தன்மையது ஆயும்அநித்தமும் நித்தமும் ஆகி நின்றுநுனித்த குணத்து ஓர் கணத்தின் கண்ணேதோற்றமும் நிலையும் கேடும் என்னும்மாற்று அரு மூன்றும் ஆக்கலும் உரித்தாம்நிம்பம் முளைத்து நிகழ்தல் நித்தியம்நிம்பத்து அப் பொருள் அன்மை அநித்தயம்பயற்றுத் தன்மை கெடாது கும்மாயம்இயற்றி அப் பயறு அழிதலும் ஏதுத்தருமாத்திகாயம் தான் எங்கும் உளதாய்பொருள்களை நடத்தும் பொருந்த நித்தியமாஅப்படித்தாகி அதன் மாத்திகாயமும்எப் பொருள்களையும் நிறுத்தல் இயற்றும் 2காலம் கணிகம் எனும் குறு நிகழ்ச்சியும்ஏலும் கற்பத்தின் நெடு நிகழ்ச்சியும்ஆக்கும் ஆகாயம் எல்லாப் பொருட்கும்பூக்கும் இடம் கொடுக்கும் புரிவிற்று ஆகும்சீவன் உடம்போடு ஒத்துக் கூடிதா இல் சுவை முதலிய புலன்களை நுகரும்ஓர் அணு புற்கலம் புற உரு ஆகும்சீர்சால் நல்வினை தீவினை அவை செயும்வரு வழி இரண்டையும் மாற்றி முன்செய்அரு வினைப் பயன் அனுபவித்து அறுத்திடுதல்அது வீடு ஆகும்' என்றனன் அவன்பின்'இது சாங்கிய மதம்' என்று எடுத்து உரைப்போன்'தனை அறிவு அரிதாய் தான் முக் குணமாய்மன நிகழ்வு இன்றி மாண்பு அமை பொதுவாய்எல்லாப் பொருளும் தோன்றுதற்கு இடம் எனச்சொல்லுதல் மூலப் பகுதி சித்தத்துமான் என்று உரைத்த புத்தி வௌிப்பட்டுஅதன்கண் ஆகாயம் வௌிப்பட்டு அதன்கண்வாயு வௌிப்பட்டு அதன்கண் அங்கிஆனது வௌிப்பட்டு அதன்கண் அப்பின்தன்மை வௌிப்பட்டு அதில் மண் வௌிப்பட்டுஅவற்றின் கூட்டத்தில் மனம் வௌிப்பட்டுஆர்ப்புறு மனத்து ஆங்கார விகாரமும்ஆகாயத்தில் செவி ஒலி விகாரமும்வாயுவில் தொக்கும் ஊறு எனும் விகாரமும்அங்கியில் கண்ணும் ஒளியும் ஆம் விகாரமும்தங்கிய அப்பில் வாய் சுவை எனும் விகாரமும்நிலக்கண் மூக்கு நாற்ற விகாரமும்சொலப்பட்ட இவற்றில் தொக்கு விகாரமாய்வாக்கு பாணி பாதம் பாயுரு உபத்தம் எனஆக்கிய இவை வௌிப்பட்டு இங்கு அறைந்தபூத விகாரத்தால் மலை மரம் முதல்ஓதிய வௌிப்பட்டு உலகாய் நிகழ்ந்துவந்த வழியே இவை சென்று அடங்கிஅந்தம் இல் பிரளயம் ஆய் இறும் அளவும்ஒன்றாய் எங்கும் பரந்து நித்தியம் ஆம்அறிதற்கு எளிதாய் முக் குணம் அன்றிபொறி உணர்விக்கும் பொதுவும் அன்றிஎப் பொருளும் தோன்றுதற்கு இடம் அன்றிஅப் பொருள் எல்லாம் அறிந்திடற்கு உணர்வாய்ஒன்றாய் எங்கும் பரந்து நித்தியமாய்நின்று உள உணர்வாய் நிகழ்தரும் புருடன்புலம் ஆர் பொருள்கள் இருபத்தைந்து உளநிலம் நீர் தீ வளி ஆகாயம்மேமெய் வாய் கண் மூக்கு செவி தாமேஉறு சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்மேவாக்கு பாணி பாதம் பாயுரு உபத்தம்ஆக்கும் மனோ புத்தி ஆங்கார சித்தம்உயிர் எனும் ஆன்மா ஒன்றொடும் ஆம்' எனச்செயிர் அறச் செப்பிய திறமும் கேட்டு'வைசேடிக! நின் வழக்கு உரை' என்ன'பொய் தீர் பொருளும் குணமும் கருமமும்சாமானியமும் விசேடமும் கூட்டமும்ஆம் ஆறு கூறு ஆம் அதில் பொருள் என்பதுகுணமும் தொழிலும் உடைத்தாய் எத் தொகைப்பொருளுக்கும் ஏது ஆம் அப் பொருள் ஒன்பான்ஞாலம் நீர் தீ வளி ஆகாயம் திசைகாலம் ஆன்மா மனம் இவற்றுள் நிலம்ஒலி ஊறு நிறம் சுவை நாற்றமொடு ஐந்தும்பயில் குணம் உடைத்து நின்ற நான்கும்சுவை முதல் ஒரோ குணம் அவை குறைவு உடையஓசை ஊறு நிறம் நாற்றம் சுவைமாசு இல் பெருமை சிறுமை வன்மைமென்மை சீர்மை நொய்ம்மை வடிவம்என்னும் நீர்மை பக்கம் முதல் அனேகம்கண்ணிய பொருளின் குணங்கள் ஆகும்பொருளும் குணமும் கருமம் இயற்றற்குஉரிய உண்மை தரும் முதல் பொதுத்தான்போதலும் நிற்றலும் பொதுக் குணம் ஆதலின்சாதலும் நிகழ்தலும் அப் பொருள் தன்மைஒன்று அணு கூட்டம் குணமும் குணியும்' என்றுஒன்றிய வாதியும் உரைத்தனன் உடனே'பூத வாதியைப் புகல் நீ' என்னத்'தாதகிப் பூவும் கட்டியும் இட்டுமற்றும் கூட்ட மதுக் களி பிறந்தாங்குஉற்றிடும் பூதத்து உணர்வு தோன்றிடும்அவ் உணர்வு அவ் அப் பூதத்து அழிவுகளின்வெவ் வேறு பிரியும் பறை ஓசையின் கெடும்உயிரொடும் கூட்டிய உணர்வு உடைப் பூதமும்உயிர் இல்லாத உணர்வு இல் பூதமும்அவ் அப் பூத வழி அவை பிறக்கும்மெய் வகை இதுவே வேறு உரை விகற்பமும்உண்மைப் பொருளும் உலோகாயதன் உணர்வேகண்கூடு அல்லது கருத்து அளவு அழியும்இம்மையும் இம்மைப் பயனும் இப் பிறப்பேபொய்ம்மை மறுமை உண்டாய் வினை துய்த்தல்'என்றலும் எல்லா மார்க்கமும் கேட்டு'நன்று அல ஆயினும் நான் மாறு உரைக்கிலேன்பிறந்த முன் பிறப்பை எய்தப் பெறுதலின்அறிந்தோர் உண்டோ?' என்று நக்கிடுதலும்'தெய்வ மயக்கினும் கனா உறு திறத்தினும்மையல் உறுவார் மனம் வேறு ஆம் வகைஐயம் அன்றி இல்லை' என்றலும் 'நின்தந்தை தாயரை அனுமானத்தால் அலதுஇந்த ஞாலத்து எவ் வகை அறிவாய்?மெய்யுணர்வு இன்றி மெய்ப் பொருள் உணர்வு அரியஐயம் அல்லது இது சொல்லப் பெறாய்' எனஉள்வரிக் கோலமோடு உன்னிய பொருள் உரைத்துஐவகைச் சமயமும் அறிந்தனள் ஆங்கு என்
Share

விளக்கம்

சமயக் கணக்கரின் திறம் கேட்கும் காதை — காப்பியத்தின் அறிவுப் போர். உலோகாயதம், பௌத்தம், சாங்கியம், நையாயிகம், வைசேடிகம், மீமாஞ்சகம் எனப் பல சமயங்களின் வாதங்கள் மணிமேகலையின் முன் வைக்கப்படுகின்றன.

இந்த அத்தியாயம் கதையை நிறுத்தி, ஒரு சித்தாந்த விவாதமாக மாறுகிறது. மணிமேகலை எல்லாவற்றையும் கேட்டு, ஒப்பிட்டு, தன் வழியைத் தேர்ந்தெடுக்கிறாள். நம்பிக்கை கேள்விக்குப் பயப்படுவதில்லை என்பதை இந்தக் காதை தமிழ்க் காப்பியத்தின் மிகப் பெரிய அறிவு அரங்கமாக நிறுத்துகிறது.