காதை 28 · கச்சி மாநகர் புக்க காதை
காதை 28
ஆங்கு தாயரோடு அறவணர்த் தேர்ந்துவாங்கு வில் தானை வானவன் வஞ்சியின்வேற்று மன்னரும் உழிஞை வெம் படையும்போல் புறம் சுற்றிய புறக்குடி கடந்துசுருங்கைத் தூம்பின் மனை வளர் தோகையர்கருங் குழல் கழீஇய கலவை நீரும்எந்திர வாவியில் இளைஞரும் மகளிரும்தம் தமில் ஆடிய சாந்து கழி நீரும்புவி காவலன் தன் புண்ணிய நல் நாள்சிவிறியும் கொம்பும் சிதறு விரை நீரும்மேலை மாதவர் பாதம் விளக்கும்சீல உபாசகர் செங் கை நறு நீரும்அறம் செய் மாக்கள் அகில் முதல் புகைத்துநிறைந்த பந்தல் தசும்பு வார் நீரும்உறுப்பு முரண் உறாமல் கந்த உத்தியினால்செறித்து அரைப்போர் தம் செழு மனை நீரும்என்று இந் நீரே எங்கும் பாய்தலின்கன்றிய கராமும் இடங்கரும் மீன்களும்ஒன்றிய புலவு ஒழி உடம்பின ஆகிதாமரை குவளை கழுநீர் ஆம்பல்பூமிசைப் பரந்து பொறி வண்டு ஆர்ப்பஇந்திர தனு என இலங்கு அகழ் உடுத்துவந்து எறி பொறிகள் வகை மாண்பு உடையகடி மதில் ஓங்கிய இடைநிலை வரைப்பில்பசு மிளை பரந்து பல் தொழில் நிறைந்தவெள்ளிக் குன்றம் உள் கிழிந்து அன்னநெடு நிலைதோறும் நிலாச் சுதை மலரும்கொடி மிடை வாயில் குறுகினள் புக்குகடை காப்பு அமைந்த காவலாளர்மிடைகொண்டு இயங்கும் வியன் மலி மறுகும்பல் மீன் விலைஞர் வெள் உப்புப் பகருநர்கள் நொடையாட்டியர் காழியர் கூவியர்மைந் நிண விலைஞர் பாசவர் வாசவர்என்னுநர் மறுகும் இருங் கோவேட்களும்செம்பு செய்ஞ்ஞ்அரும் கஞ்சகாரரும்பைம்பொன் செய்ஞ்ஞ்அரும் பொன் செய் கொல்லரும்மரம் கொல் தச்சரும் மண்ணீட்டாளரும்வரம் தர எழுதிய ஓவிய மாக்களும்தோலின் துன்னரும் துன்ன வினைஞரும்மாலைக்காரரும் காலக் கணிதரும்நலம் தரு பண்ணும் திறனும் வாய்ப்பநிலம் கலம் கண்டம் நிகழக் காட்டும்பாணர் என்று இவர் பல் வகை மறுகும்விலங்கரம் பொரூஉம் வெள் வளை போழ்நரோடுஇலங்கு மணி வினைஞ்அர் இரீஇய மறுகும்வேத்தியல் பொது இயல் என்று இவ் இரண்டின்கூத்து இயல்பு அறிந்த கூத்தியர் மறுகும்பால் வேறு ஆக எண் வகைப் பட்டகூலம் குவைஇய கூல மறுகும்மாகதர் சூதர் வேதாளிகர் மறுகும்போகம் புரக்கும் பொதுவர் பொலி மறுகும்கண் நுழைகல்லா நுண் நூல் கைவினைவண்ண அறுவையர் வளம் திகழ் மறுகும்பொன் உரை காண்போர் நல் மனை மறுகும்பல் மணி பகர்வோர் மன்னிய மறுகும்மறையோர் அருந் தொழில் குறையா மறுகும்அரைசு இயல் மறுகும் அமைச்சு இயல் மறுகும்எனைப் பெருந் தொழில் செய் ஏனோர் மறுகும்மன்றமும் பொதியிலும் சந்தியும் சதுக்கமும்புதுக் கோள் யானையும் பொன் தார்ப் புரவியும்கதிக்கு உற வடிப்போர் கவின் பெறு வீதியும்சேண் ஓங்கு அருவி தாழ்ந்த செய்குன்றமும்வேணவா மிகுக்கும் விரை மரக் காவும்விண்ணவர் தங்கள் விசும்பு இடம் மறந்துநண்ணுதற்கு ஒத்த நல் நீர் இடங்களும்சாலையும் கூடமும் தமனியப் பொதியிலும்கோலம் குயின்ற கொள்கை இடங்களும்கண்டு மகிழ்வுற்று கொண்ட வேடமோடுஅந்தர சாரிகள் அமர்ந்து இனிது உறையும்இந்திர விகாரம் என எழில் பெற்றுநவை அறு நாதன் நல் அறம் பகர்வோர்உறையும் பள்ளி புக்கு இறை வளை நல்லாள்கோவலன் தாதை மா தவம் புரிந்தோன்பாதம் பணிந்து தன் பாத்திர தானமும்தானப் பயத்தால் சாவக மன்னவன்ஊனம் ஒன்று இன்றி உலகு ஆள் செல்வமும்செல்வற் கொணர்ந்து அத் தீவகப் பீடிகைஒல்காது காட்ட பிறப்பினை உணர்ந்ததும்உணர்ந்தோன் முன்னர் உயர் தெய்வம் தோன்றிமனம் கவல் கெடுத்ததும் மா நகர் கடல் கொளஅறவண அடிகளும் தாயரும் ஆங்கு விட்டுஇறவாது இப் பதிப் புகுந்தது கேட்டதும்சாவக மன்னன் தன் நாடு எய்ததீவகம் விட்டு இத் திரு நகர் புகுந்ததும்புக்க பின் அந்தப் பொய் உருவுடனேதக்க சமயிகள் தம் திறம் கேட்டதும்அவ்வவர் சமயத்து அறி பொருள் எல்லாம்செவ்விது அன்மையின் சிந்தை வையாததும்நாதன் நல் அறம் கேட்டலை விரும்பிமாதவன் தேர்ந்து வந்த வண்ணமும்சொல்லினள் ஆதலின் 'தூயோய்! நின்னை என்நல்வினைப் பயன்கொல் நான் கண்டது?' எனத்'தையல்' கேள் நின் தாதையும் தாயும்செய்த தீவினையின் செழு நகர் கேடுறதுன்புற விளிந்தமை கேட்டுச் சுகதன்அன்பு கொள் அறத்திற்கு அருகனேன் ஆதலின்மனைத்திறவாழ்க்கையை மாயம் என்று உணர்ந்துதினைத்தனை ஆயினும் செல்வமும் யாக்கையும்நிலையா என்றே நிலைபெற உணர்ந்தேமலையா அறத்தின் மா தவம் புரிந்தேன்புரிந்த யான் இப் பூங் கொடிப் பெயர்ப் படூஉம்திருந்திய நல் நகர் சேர்ந்தது கேளாய்குடக் கோச் சேரலன் குட்டுவர் பெருந்தகைவிடர்ச் சிலை பொறித்த வேந்தன் முன் நாள்துப்பு அடு செவ் வாய்த் துடி இடையாரொடும்இப் பொழில் புகுந்து ஆங்கு இருந்த எல்லையுள்இலங்கா தீவத்துச் சமனொளி என்னும்சிலம்பினை எய்தி வலம் கொண்டு மீளும்தரும சாரணர் தங்கிய குணத்தோர்கரு முகில் படலத்துக் ககனத்து இயங்குவோர்அரைசற்கு ஏது அவ் வழி நிகழ்தலின்புரையோர் தாமும் இப் பூம்பொழில் இழிந்துகல் தலத்து இருந்துழி காவலன்விரும்பிமுன் தவம் உடைமையின் முனிகளை ஏத்திப்பங்கயச் சேவடி விளக்கி பான்மையின்அங்கு அவர்க்கு அறு சுவை நால் வகை அமிழ்தம்பாத்திரத்து அளித்துப் பலபல சிறப்பொடுவேத்தவையாரொடும் ஏத்தினன் இறைஞ்சலின்பிறப்பின் துன்பமும் பிறவா இன்பமும்அறத்தகை முதல்வன் அருளிய வாய்மைஇன்ப ஆர் அமுது இறைவன் செவிமுதல்துன்பம் நீங்கச் சொரியும் அந் நாள்நின் பெருந் தாதைக்கு ஒன்பது வழி முறைமுன்னோன் கோவலன் மன்னவன் தனக்குநீங்காக் காதல் பாங்கன் ஆதலின்தாங்க நல் அறம் தானும் கேட்டுமுன்னோர் முறைமையின் படைத்ததை அன்றிதன்னான் இயன்ற தனம் பல கோடிஎழு நாள் எல்லையுள் இரவலர்க்கு ஈத்துதொழு தவம் புரிந்தோன் சுகதற்கு இயற்றியவான் ஓங்கு சிமையத்து வால் ஒளிச் சயித்தம்ஈனோர்க்கு எல்லாம் இடர் கெட இயன்றதுகண்டு தொழுது ஏத்தும் காதலின் வந்து இத்தண்டாக் காட்சித் தவத்தோர் அருளிக்"காவிரிப் பட்டினம் கடல் கொளும்" என்ற அத்தூ உரை கேட்டுத் துணிந்து இவண் இருந்ததுஇன்னும் கேளாய் நல் நெறி மாதே!"தீவினை உருப்பச் சென்ற நின் தாதையும்தேவரில் தோற்றி முன்செய் தவப் பயத்தால்ஆங்கு அத் தீவினை இன்னும் துய்த்துப்பூங்கொடி! முன்னவன் போதியில் நல் அறம்தாங்கிய தவத்தால் தான் தவம் தாங்கிக்காதலி தன்னொடு கபிலை அம் பதியில்நாதன் நல் அறம் கேட்டு வீடு எய்தும்" என்றுஅற்புதக் கிளவி அறிந்தோர் கூறச்சொல் பயன் உணர்ந்தேன் தோகை! யானும்அந் நாள் ஆங்கு அவன் அற நெறி கேட்குவன்நின்னது தன்மை அந் நெடு நிலைக் கந்தில் துன்னியதுவதிகன் உரையின் துணிந்தனை அன்றோ?தவ நெறி அறவணன் சாற்றக் கேட்டனன்ஆங்கு அவன் தானும் நின் அறத்திற்கு ஏதுபூங்கொடி! கச்சி மா நகர் ஆதலின்மற்று அம் மா நகர் மாதவன் பெயர் நாள்பொன் தொடி தாயரும் அப் பதிப் படர்ந்தனர்அன்னதை அன்றியும் அணி இழை! கேளாய்பொன் எயில் காஞ்சி நாடு கவின் அழிந்துமன் உயிர் மடிய மழை வளம் கரத்தலின்அந் நகர் மாதவர்க்கு ஐயம் இடுவோர்இன்மையின் இந் நகர் எய்தினர் காணாய்ஆர் உயிர் மருந்தே! அந் நாட்டு அகவயின்கார் எனத் தோன்றிக் காத்தல் நின் கடன்' எனஅருந் தவன் அருள ஆய் இழை வணங்கித்திருந்திய பாத்திரம் செங் கையின் ஏந்திக்கொடி மதில் மூதூர்க் குடக்கண் நின்று ஓங்கிவட திசை மருங்கின் வானத்து இயங்கித்தேவர் கோமான் காவல் மாநகர்மண் மிசைக் கிடந்தென வளம் தலைமயங்கியபொன் நகர் வறிதாப் புல்லென்று ஆயதுகண்டு உளம் கசிந்த ஒண் தொடி நங்கைபொன் கொடி மூதூர்ப் புரிசை வலம் கொண்டுநடு நகர் எல்லை நண்ணினள் இழிந்துதொடு கழல் கிள்ளி துணை இளங் கிள்ளிசெம் பொன் மாச் சினைத் திருமணிப் பாசடைப்பைம் பூம் போதிப் பகவற்கு இயற்றியசேதியம் தொழுது தென்மேற்கு ஆகதாது அணி பூம்பொழில் தான் சென்று எய்தலும்வையம் காவலன் தன் பால் சென்றுகைதொழுது இறைஞ்சி கஞ்சுகன் உரைப்போன்'கோவலன் மடந்தை குணவதம் புரிந்தோள்நாவல் அம் தீவில் தான் நனி மிக்கோள்அங்கையின் ஏந்திய அமுதசுரபியொடுதங்காது இப் பதித் தருமதவனத்தேவந்து தோன்றினள் மா மழை போல்' எனமந்திரச் சுற்றமொடு மன்னனும் விரும்பி'கந்திற்பாவை கட்டுரை எல்லாம்வாய் ஆகின்று' என வந்தித்து ஏத்திஆய் வளை நல்லாள் தன்னுழைச் சென்று'செங்கோல் கோடியோ செய் தவம் பிழைத்தோகொங்கு அவிழ் குழலார் கற்புக் குறைபட்டோநலத்தகை நல்லாய்! நல் நாடு எல்லாம்அலத்தல்காலை ஆகியது அறியேன்மயங்குவேன் முன்னர் ஓர் மா தெய்வம் தோன்றி"உயங்காதொழி நின் உயர் தவத்தால் ஓர்காரிகை தோன்றும் அவள் பெருங் கடிஞையின்ஆருயிர் மருந்தால் அகல் நிலம் உய்யும்ஆங்கு அவள் அருளால் அமரர் கோன் ஏவலின்தாங்கா மாரியும் தான் நனி பொழியும்அன்னாள் இந்த அகல் நகர் புகுந்தபின் நாள் நிகழும் பேர் அறம் பலவால்கார் வறம் கூரினும் நீர் வறம் கூராதுபார் அகம் விதியின் பண்டையோர் இழைத்தகோமுகி என்னும் கொழு நீர் இலஞ்சியொடுமா மணிபல்லவம் வந்தது ஈங்கு எனபொய்கையும் பொழிலும் புனைமின்" என்று அறைந்து அத்தெய்வதம் போய பின் செய்து யாம் அமைத்ததுஇவ் இடம்" என்றே அவ் இடம் காட்ட அத்தீவகம் போன்ற காஅகம் பொருந்திக்கண்டு உளம் சிறந்த காரிகை நல்லாள்'பண்டை எம் பிறப்பினைப் பான்மையின் காட்டியஅங்கு அப் பீடிகை இது என' அறவோன்பங்கயப் பீடிகை பான்மையின் வகுத்துதீவதிலகையும் திரு மணிமேகலாமா பெருந் தெய்வமும் வந்தித்து ஏத்துதற்குஒத்த கோயிலுள் அத்தகப் புனைந்துவிழவும் சிறப்பும் வேந்தன் இயற்றதொழுதகை மாதர் தொழுதனள் ஏத்திப்பங்கயப் பீடிகை பசிப் பிணி மருந்து எனும்அங்கையின் ஏந்திய அமுதசுரபியைவைத்து நின்று 'எல்லா உயிரும் வருக' எனபைத்து அரவு அல்குல் பாவை தன் கிளவியின்மொய்த்த மூ அறு பாடை மாக்களில்காணார் கேளார் கால் முடம் ஆனோர்பேணா மாக்கள் பேசார் பிணித்தோர்படிவ நோன்பியர் பசி நோய் உற்றோர்மடி நல்கூர்ந்த மாக்கள் யாவரும்பல் நூறாயிரம் விலங்கின் தொகுதியும்மன் உயிர் அடங்கலும் வந்து ஒருங்கு ஈண்டிஅருந்தியோர்க்கு எல்லாம் ஆர் உயிர் மருந்து ஆய்பெருந் தவர் கைப் பெய் பிச்சையின் பயனும்நீரும் நிலமும் காலமும் கருவியும்சீர் பெற வித்திய வித்தின் விளைவும்பெருகியதென்ன பெரு வளம் சுரப்பவசித் தொழில் உதவி வளம் தந்தது எனபசிப் பிணி தீர்த்த பாவையை ஏத்திச்செல்லும்காலை தாயர் தம்முடன்அல்லவை கடிந்த அறவண அடிகளும்மல்லல் மூதூர் மன் உயிர் முதல்விநல் அறச்சாலை நண்ணினர் சேறலும்சென்று அவர் தம்மைத் திருவடி வணங்கி'நன்று' என விரும்பி நல் அடி கழுவிஆசனத்து ஏற்றி அறு சுவை நால் வகைப்போனகம் ஏந்தி பொழுதினில் கொண்டபின்பாசிலைத் திரையலும் பளிதமும் படைத்து'வாய்வது ஆக என் மனப்பாட்டு அறம்' எனமாயை விட்டு இறைஞ்சினள் மணிமேகலை என்
காதை 28