verse 9261 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Indhirasitthu Vadhai Padalam · Verse 9 of 71
கம்பராமாயணம் 9261 · இந்திரசித்து வதைப் படலம்
'பேதைமை உரைத்தாய்; பிள்ளாய்! உலகு எலாம் பெயரப், பேராக்காதை என் புகழினோடு ' நிலைபெற, அமரர் காண,மீது எழும் மொக்குள் அன்ன யாக்கையை விடுவது அல்லால்,சீதையை விடுவது உண்டோ, இருபது திண்தோள் உண்டாய்?