Sundara Kandam · Sambumaali Vadhai Padalam · Verse 10 of 51
சம்புமாலியொடு சென்ற சேனையின் அளவு
ஆயிரம் ஐந்தொடு ஐந்து ஆம் ஆழி அம் தடம் தேர், அத்தேர்க்குஏயின இரட்டி யானை, யானையின் இரட்டி பாய்மா,போயின பதாதி சொன்ன புரவியின் இரட்டி போல் ஆம்,தீயவன் தடம் தேர் சுற்றித் தெற்று எனச் சென்ற சேனை.