Kadai 11 · Silappathikaram · Ilango Adigal
நாடுகாண் காதை
(நிலைமண்டில ஆசிரியப்பா)வான்கண் விழியா வைகறை யாமத்துமீன்திகழ் விசும்பின் வெண்மதி நீங்கக்கார்இருள் நின்ற கடைநாள் கங்குல்ஊழ்வினைக் கடைஇ உள்ளம் துரப்பஏழகத் தகரும் எகினக் கவரியும்தூமயிர் அன்னமும் துணைஎனத் திரியும்தாளொடு குயின்ற தகைசால் சிறப்பின்நீள்நெடு வாயில் நெடுங்கடை கழிந்துஆங்கு,அணிகிளர் அரவின் அறிதுயில் அமர்ந்தமணிவண்ணன் கோட்டம் வலம்செயாக் கழிந்து,பணைஐந்து ஓங்கிய பாசிலைப் போதிஅணிதிகழ் நீழல் அறவோன் திருமொழிஅந்தர சாரிகள் அறைந்தனர் சாற்றும்இந்திர விகாரம் ஏழுடன் போகி,புலவுஊண் துறந்து பொய்யா விரதத்துஅவலம் நீத்துஅறிந்து அடங்கிய கொள்கைமெய்வகை உணர்ந்த விழுமியோர் குழீஇயஐவகை நின்ற அருகத் தானத்துச்சந்தி ஐந்தும் தம்முடன் கூடிவந்துதலை மயங்கிய வான்பெரு மன்றத்துப்பொலம்பூம் பிண்டி நலம்கிளர் கொழுநிழல்நீர்அணி விழவினும் நெடுந்தேர் விழவினும்சாரணர் வருஉம் தகுதிஉண் டாம்எனஉலக நோன்பிகள் ஒருங்குடன் இட்டஇலகுஒளிச் சிலாதலம் தொழுதுவலம் கொண்டு,மலைதலைக் கொண்ட பேர்யாறு போலும்உலக இடைகழி ஒருங்குடன் நீங்கி,கலையி லாளன் காமர் வேனிலொடுமலைய மாருதம் மன்னவற்கு இறுக்கும்பன்மலர் அடுக்கிய நன்மரப் பந்தர்இலவந் திகையின் எயில்புறம் போகி,தாழ்பொழில் உடுத்த தண்பதப் பெருவழிக்காவிரி வாயில் கடைமுகம் கழிந்து,குடதிசைக் கொண்டு கொழும்புனல் காவிரிவடபெருங் கோட்டு மலர்ப்பொழில் நுழைந்து,காவதம் கடந்து கவுந்திப் பள்ளிப்பூமரப் பொதும்பர்ப் பொருந்தி ஆங்கண்இறும்கொடி நுசுப்போடு இனைந்துஅடி வருந்திநறும்பல் கூந்தல் குறும்பல் உயிர்த்துமுதிராக் கிளவியின் முள்எயிறு இலங்கமதுரை மூதுர் யாதுஎன வினவ,ஆறுஐங் காதம்நம் அகல்நாட்டு உம்பர்நாறுஐங் கூந்தல் நணித்துஎன நக்குத்,தேமொழி தன்னொடும் சிறையகத்து இருந்தகாவுந்தி ஐயையைக் கண்டுஅடி தொழலும்,உருவும் குலனும் உயர்ப்பேர் ஒழுக்கமும்பெருமகன் திருமொழி பிறழா நோன்பும்உடையீர் என்னோ உறுக ணாளரின்கடைகழிந்து இங்ஙனம் கருதிய வாறுஎன,உரையாட்டு இல்லை உறுதவத் தீர்யான்மதுரை மூதுர் வரைபொருள் வேட்கையேன்.பாடகச் சீறடி பரல்பகை உழவாகாடுஇடை யிட்ட நாடுநீர் கழிதற்குஅரிதுஇவள் செவ்வி அறிகுநர் யாரோஉரியது அன்றுஈங்கு ஒழிகஎன ஒழியீர்மறஉரை நீத்த மாசுஅறு கேள்வியர்அறஉரை கேட்டுஆங்கு அறிவனை ஏத்தத்தென்தமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரைக்குஒன்றிய உள்ளம் உடையேன் ஆகலின்போதுவல் யானும் போதுமின் என்றகாவுந்தி ஐயையைக் கைதொழுது ஏத்திஅடிகள் நீரே அருளிதிர் ஆயின்இத்தொடிவளைத் தோளி துயர்த்தீர்த் தேன்என,கோவலன் காணாய் கொண்ட இந்நெறிக்குஏதம் தருவன யாங்கும்பல கேண்மோ:வெயில்நிறம் பொறாஅ மெல்இயல் கொண்டுபயில்பூந் தண்டலைப் படர்குவம் எனினே,மண்பக வீழ்ந்த கிழங்குஅகழ் குழியைச்சண்பகம் நிறைத்த தாதுசோர் பொங்கர்பொய்யறைப் படுத்துப் போற்றா மாக்கட்குக்கையறு துன்பம் காட்டினும் காட்டும்,உதிர்ப்பூஞ் செம்மலின் ஒதுங்கினர் கழிவோர்முதிர்த்தேம் பழம்பகை முட்டினும் முட்டும்,மஞ்சளும் இஞ்சியும் மயங்குஅரில் வலயத்துச்செஞ்சுளைப் பலவின் பரல்பகை உறுக்கும்.கயல்நெடுங் கண்ணி காதல் கேள்வ.வயல்உழைப் படர்க்குவம் எனினே ஆங்குப்பூநாறு இலஞ்சிப் பொருகயல் ஓட்டிநீர்நாய் கெளவிய நெடும்புற வாளைமலங்குமிளிர் செறுவின் விலங்கப் பாயின்கலங்கலும் உண்டுஇக் காரிகை, ஆங்கண்கரும்பில் தொடுத்த பெருந்தேன் சிதைந்துசுரும்புசூழ் பொய்கைத் தூநீர் கலக்கும்அடங்கா வேட்கையின் அறிவுஅஞர் எய்திக்குடங்கையின் கொண்டு கொள்ளவும் கூடும்,குறுநர் இட்ட குவளைஅம் போதொடுபொறிவரி வண்டினம் பொருந்திய கிடக்கைநெறிசெல் வருத்தத்து நீர்அஞர் எய்திஅறியாது அடிஆங்கு இடுதலும் கூடும்,எறிநீர் அடைகரை இயக்கம் தன்னில்பொறிமாண் அலவனும் நந்தும் போற்றாதுஊழ்அடி ஒதுக்கத்து உறுநோய் காணின்தாழ்தரு துன்பம் தாங்கவும் ஒண்ணா,வயலும் சோலையும் அல்லது யாங்கணும்அயல்படக் கிடந்த நெறிஆங்கு இல்லைநெறிஇருங் குஞ்சி நீவெய் யோளொடுகுறிஅறிந்து அவைஅவை குறுகாது ஓம்புஎன,தோம்அறு கடிஞையும் சுவல்மேல் அறுவையும்காவுந்தி ஐயைகைப் பீலியும் கொண்டுமொழிப்பொருள் தெய்வம் வழித்துணை ஆகெனப்பழிப்புஅருஞ் சிறப்பின் வழிப்படர் புரிந்தோர்,கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்கால்பொரு நிவப்பின் கடுங்குரல் ஏற்றொடும்சூல்முதிர் கொண்மூப் பெயல்வளம் சுரப்பக்குடமலைப் பிறந்த கொழும்பல் தாரமொடுகடல்வளன் எதிரக் கயவாய் நெரிக்கும்காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலைஓஇறந்து ஒலிக்கும் ஒலியே அல்லதுஆம்பியும் கிழாரும் வீங்குஇசை ஏத்தமும்ஓங்குநீர்ப் பிழாவும் ஒலித்தல் செல்லாக்கழனிச் செந்நெல் கரும்புசூழ் மருங்கில்பழனத் தாமரைப் பைம்பூங் கானத்துக்கம்புட் கோழியும் கனைகுரல் நாரையும்செங்கால் அன்னமும் பைங்கால் கொக்கும்கானக் கோழியும் நீர்நிறக் காக்கையும்உள்ளும் ஊரலும் புள்ளும் புதாவும்வெல்போர் வேந்தர் முனையிடம் போலப்பல்வேறு குழூஉக்குரல் பரந்த ஓதையும்,உழாஅ நுண்தொளி உள்புக்கு அழுந்தியகழாஅமயிர் யாக்கைச் செங்கண் காரான்சொரிபுறம் உரிஞ்சப் புரிஞெகிழ்பு உற்றகுமரிக் கூட்டில் கொழும்பல் உணவுகவரிச் செந்நெல் காய்த்தலைச் சொரியக்கருங்கை வினைஞரும் களமருங் கூடிஒருங்குநின்று ஆர்க்கும் ஒலியே அன்றியும்,கடிமலர் களைந்து முடிநாறு அழுத்தித்தொடிவளைத் தோளும் ஆகமும் தோய்ந்துசேறுஆடு கோலமொடு வீறுபெறத் தோன்றிச்செங்கயல் நெடுங்கண் சின்மொழிக் கடைசியர்வெங்கள் தொலைச்சிய விருந்திற் பாணியும்,கொழுங்கொடி அறுகையும் குவளையும் கலந்துவிளங்குகதிர்த் தொடுத்த விரியல் சூட்டிப்பார்உடைப் பனர்ப்போல் பழிச்சினர் கைதொழஏரொடு நின்றோர் ஏர்மங் கலமும்,அரிந்துகால் குவித்தோர் அரிகடா வுறுத்தபெருஞ்செய்ந் நெல்லின் முகவைப் பாட்டும்,தெண்கிணைப் பொருநர் செருக்குடன் எடுத்தமண்கனை முழவின் மகிழ்இசை ஓதையும்,பேர்யாற்று அடைகரை நீரிற் கேட்டுஆங்குஆர்வ நெஞ்சமோடு அவலம் கொள்ளார்,உழைப்புலிக் கொடித்தேர் உரவோன் கொற்றமொடுமழைக்கரு உயிர்க்கும் அழல்திகழ் அட்டில்மறையோர் ஆக்கிய ஆவூதி நறும்புகைஇறைஉயர் மாடம் எங்கணும் போர்த்துமஞ்சுசூழ் மலையின் மாணத் தோன்றும்மங்கல மறையோர் இருக்கை அன்றியும்,பரப்புநீர்க் காவிரிப் பாவைதன் புதல்வர்இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும்உழவிடை விளைப்போர் பழவிறல் ஊர்களும்,பொங்கழி ஆலைப் புகையொடும் பரந்துமங்குல் வானத்து மலையின் தோன்றும்ஊர்இடை யிட்ட நாடுஉடன் கண்டுகாவதம் அல்லது கடவார் ஆகிப்பன்னாள் தங்கிச் செல்நாள் ஒருநாள்:ஆற்றுவீ அரங்கத்து வீற்றுவீற்று ஆகிக்குரங்குஅமை உடுத்த மரம்பயில் அடுக்கத்து,வானவர் உறையும் பூநாறு ஒருசிறைப்பட்டினப் பாக்கம் விட்டனர் நீங்காப்பெரும்பெயர் ஐயர் ஒருங்குடன் இட்டஇலங்குஒளிச் சிலாதலம் மேல்இருந் தருளிப்பெருமகன் அதிசயம் பிறழா வாய்மைத்தருமம் சாற்றும் சாரணர் தோன்றப்,பண்டைத் தொல்வினை பாறுக என்றேகண்டுஅறி கவுந்தியொடு கால்உற வீழ்ந்தோர்வந்த காரணம் வயங்கிய கொள்கைச்சிந்தை விளக்கில் தெரிந்தோன் ஆயினும்ஆர்வமும் செற்றமும் அகல நீக்கியவீரன் ஆகலின் விழுமம் கொள்ளான்,கழிப்பெருஞ் சிறப்பின் கவுந்தி காணாய்:ஒழிகென ஒழியாது ஊட்டும் வல்வினைஇட்ட வித்தின் எதிர்வந்து எய்திஒட்டுங் காலை ஒழிக்கவும் ஒண்ணாகடுங்கால் நெடுவெளி இடும்சுடர் என்னஒருங்குடன் நில்லா உடம்பிடை உயிர்கள்அறிவன் அறவோன் அறிவுவரம்பு இகந்தோன்செறிவன் சினேந்திரன் சித்தன் பகவன்தரும முதல்வன் தலைவன் தருமன்பொருளன் புனிதன் புராணன் புலவன்சினவரன் தேவன் சிவகதி நாயகன்பரமன் குணவதன் பரத்தில் ஒளியோன்தத்துவன் சாதுவன் சாரணன் காரணன்சித்தன் பெரியவன் செம்மல் திகழ்ஒளிஇறைவன் குரவன் இயல்குணன் எம்கோன்குறைவில் புகழோன் குணப்பெருங் கோமான்சங்கரன் ஈசன் சயம்பு சதுமுகன்அங்கம் பயந்தோன் அருகன் அருள்முனிபண்ணவன் எண்குணன் பாத்தில் பழம்பொருள்விண்ணவன் வேத முதல்வன் விளங்குஓளிஓதிய வேதத்து ஒளிஉறின் அல்லதுபோதார் பிறவிப் பொதிஅறை யோர்எனச்சாரணர் வாய்மொழி கேட்டுத் தவமுதல்காவுந்தி யும்தன் கைதலை மேற்கொண்டுஒருமூன்று அவித்தோன் ஓதிய ஞானத்திருமொழிக்கு அல்லதுஎன் செவியகம் திறவா,காமனை வென்றோன் ஆயிரத்து எட்டுநாமம் அல்லது நவிலாது என்நா,ஐவரை வென்றோன் அடியிணை அல்லதுகைவரைக் காணினும் காணா என்கண்,அருள்அறம் பூண்டோ ன் திருமெய்க்கு அல்லதுஎன்பொருள்இல் யாக்கை பூமியில் பொருந்தாது,அருகர் அறவன் அறிவோற்கு அல்லதுஎன்இருகையும் கூடி ஒருவழிக் குவியா,மலர்மிசை நடந்தோன் மலர்அடி அல்லதுஎன்தலைமிசை உச்சி தான்அணிப் பொறாஅதுஇறுதிஇல் இன்பத்து இறைமொழிக்கு அல்லதுமறுதிர ஓதிஎன் மனம்புடை பெயராதுஎன்றவன் இசைமொழி ஏத்தக் கேட்டுஅதற்குஒன்றிய மாதவர் உயர்மிசை ஓங்கிநிவந்துஆங்கு ஒருமுழம் நீள்நிலம் நீங்கிப்பவம்தரு பாசம் கவுந்தி கெடுகென்றுஅந்தரம் ஆறாப் படர்வோர்த் தொழுதுபந்தம் அறுகெனப் பணிந்தனர் போந்து,கார்அணி பூம்பொழில் காவிரிப் பேர்யாற்றுநீர்அணி மாடத்து நெடுந்துறை போகிமாதரும் கணவனும் மாதவத் தாட்டியும்தீதுதீர் நியமத் தென்கரை எய்திப்போதுசூழ் கிடக்கைஓர் பூம்பொழில் இருந்துழிவம்பப் பரத்தை வறுமொழி யாளனொடுகொங்குஅலர் பூம்பொழில் குறுகினர் சென்றோர்காமனும் தேவியும் போலும் ஈங்குஇவர்ஆர்எனக் கேட்டுஈங்கு அறிகுவம் என்றே,நோற்றுஉணல் யாக்கை நொசிதவத் தீர்உடன்ஆற்றுவழிப் பட்டோ ர் ஆர்என வினவ,என்மக்கள் காணீர் மானிட யாக்கையர்பக்கம் நீங்குமின் பரிபுலம் பினர்என,உடன்வயிற் றோர்க்கள் ஒருங்குடன் வாழ்க்கைகடவதும் உண்டோ ? கற்றறிந் தீர்எனத்,தீமொழி கேட்டுச் செவியகம் புதைத்துக்காதலன் முன்னர்க் கண்ணகி நடுங்க,எள்ளுநர் போலும்இவர் என்பூங் கோதையைமுள்உடைக் காட்டின் முதுநரி ஆகெனக்கவுந்தி இட்ட தவம்தரு சாபம்கட்டியது ஆதலின், பட்டதை அறியார்குறுநரி நெடுங்குரல் கூவிளி கேட்டுநறுமலர்க் கோதையும் நம்பியும் நடுங்கி,நெறியின் நீங்கியோர் நீர்அல கூறினும்அறியா மைஎன்று அறியல் வேண்டும்செய்தவத் தீர்நும் திருமுன் பிழைத்தோர்க்குஉய்திக் காலம் உரையீ ரோஎன,அறியா மையின்இன்று இழிபிறப்பு உற்றோர்உறையூர் நொச்சி ஒருபுடை ஒதுங்கிப்பன்னிரு மதியம் படர்நோய் உழந்தபின்முன்னை உருவம் பெறுகஈங்கு இவர்எனச்சாபவிடை செய்து, தவப்பெருஞ் சிறப்பின்காவுந்தி ஐயையும் தேவியும் கணவனும்முறம்செவி வாரணம் முஞ்சமம் முருக்கியபுறஞ்சிறை வாரணம் புக்கனர் புரிந்துஎன்.(கட்டுரை)முடிஉடை வேந்தர் மூவ ருள்ளும்தொடிவிளங்கு தடக்கைச் சோழர்க்குலத்து உதித்தோர்அறனும் மறனும் ஆற்றலும் அவர்தம்பழவிறல் மூதுர்ப் பண்புமேம் படுதலும்விழவுமலி சிறப்பும் விண்ணவர் வரவும்ஒடியா இன்பத்து அவர்உறை நாட்டுக்குடியும் கூழின் பெருக்கமும் அவர்தம்தெய்வக் காவிரித் தீதுதீர் சிறப்பும்பொய்யா வானம் புதுப்புனல் பொழிதலும்அரங்கும் ஆடலும் தூக்கும் வரியும்பரந்துஇசை எய்திய பாரதி விருத்தியும்திணைநிலை வரியும் இணைநிலை வரியும்அணைவுறக் கிடந்த யாழின் தொகுதியும்ஈர்ஏழ் சகோடமும் இடநிலைப் பாலையும்தாரத்து ஆக்கமும் தான்தெரி பண்ணும்ஊரகத் தேரும் ஒளியுடைப் பாணியும்என்றுஇவை அனைத்தும் பிறபொருள் வைப்போடுஒன்றித் தோன்றும் தனிக்கோள் நிலைமையும்ஒரு பரிசா நோக்கிக் கிடந்த(வெண்பா)காலை அரும்பி மலரும் கதிரவனும்மாலை மதியமும்போல் வாழியரோ - வேலைஅகழால் அமைந்த அவனிக்கு மாலைப்புகழால் அமைந்த புகார்.
விளக்கம்
புகரை விட்டுப் புறப்படும் இருவரின் கண்ணால் தமிழ்நாடே ஒரு நீண்ட காட்சியாகிறது. ஆறுகள், வயல்கள், ஊர்கள், மலைகள் — நாடுகாண் காதை ஒரு பயணக் கவிதை.
வழியில் கவுந்தி அடிகள் வருகிறார்; ஒரு சமணத் துறவியின் அறிவுரை பயணத்தோடு சேர்ந்துகொள்கிறது. பயணம் என்பது இடம் மாறுவது மட்டுமல்ல, நம்பிக்கை மாறுவதும் கூட என்பதை இந்த அத்தியாயம் காட்டுகிறது.