Kadai 6 · Silappathikaram · Ilango Adigal

இந்திர விழவு ஊர் எடுத்த காதை

(நிலைமண்டில ஆசிரியப்பா)அலைநீர் ஆடை மலைமுலை ஆகத்துஆரப் பேரியாற்று மாரிக் கூந்தல்கண்அகன் பரப்பின் மண்ணக மடந்தைபுதைஇருள் படாஅம் போக நீக்கிஉடைய மால்வரை உச்சித் தோன்றிஉலகுவிளங்கு அவிர்ஒளி மலர்கதிர் பரப்பி,வேயா மாடமும், வியன்கல இருக்கையும்,மான்கண் காதலர் மாளிகை இடங்களும்,கயவாய் மருங்கில் காண்போர்த் தடுக்கும்பயன்அறிவு அறியா யவனர் இருக்கையும்,கலம்தரு திருவின் புலம்பெயர் மாக்கள்கலந்துஇருந்து உறையும் இலங்குநீர் வரைப்பும்,வண்ணமும் சுண்ணமும் தண்நறுஞ் சாந்தமும்பூவும் புகையும் மேவிய விரையும்பகர்வனர் திரிதரு நகர வீதியும்,பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்கட்டும் நுண்வினைக் காருகர் இருக்கையும்,தூசும் துகிரும் ஆரமும் அகிலும்மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும்அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியாவளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்,பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடுகூலம் குவித்த கூல வீதியும்,காழியர் கூவியர் கள்நொடை யாட்டியர்மீன்விலைப் பரதவர் வெள்உப்புப் பகருநர்பாசவர் வாசவர் பல்நிண விலைஞரொடுஓசுநர் செறிந்த ஊன்மலி இருக்கையும்,கஞ்ச காரரும் செம்புசெய் குநரும்மரங்கொல் தச்சரும் கருங்கைக் கொல்லரும்கண்ணுள் வினைஞரும் மண்ஈட் டாளரும்பொன்செய் கொல்லரும் நன்கலம் தருநரும்துன்ன காரரும் தோலின் துன்னரும்கிழியினும் கிடையினும் தொழில்பல பெருக்கிப்பழுதுஇல் செய்வினைப் பால்கெழு மாக்களும்குழலினும் யாழினும் குரல்முதல் ஏழும்வழுஇன்றி இசைத்து வழித்திறம் காட்டும்அரும்பெறல் மரபின் பெரும்பாண் இருக்கையும்,சிறுகுறுங் கைவினைப் பிறர்வினை யாளரொடுமறுஇன்றி விளங்கும் மருவூர்ப் பாக்கமும்,கோவியன் வீதியும், கொடித்தேர் வீதியும்,பீடிகைத் தெருவும், பெருங்குடி வாணிகர்மாட மறுகும், மறையோர் இருக்கையும்,வீழ்குடி உழவரொடு விளங்கிய கொள்கைஆயுள் வேதரும் காலக் கணிதரும்பால்வகை தெரிந்த பன்முறை இருக்கையும்,திருமணி குயிற்றுநர் சிறந்த கொள்கையோடுஅணிவளை போழுநர் அகன்பெரு வீதியும்,சூதர் மாகதர் வேதா ளிகரொடுநாழிகைக் கணக்கர் நலம்பெறு கண்ணுளர்காவல் கணிகையர் ஆடல் கூத்தியர்பூவிலை மடந்தையர் ஏவல் சிலதியர்பயில்தொழில் குயிலுவர் பன்முறைக் கருவியர்நகைவே ழம்பரொடு வகைதெரி இருக்கையும்,கடும்பரி கடவுநர் களிற்றின் பாகர்நெடுந்தேர் ஊருநர் கடுங்கண் மறவர்இருந்துபுறம் சுற்றிய பெரும்பாய் இருக்கையும்,பீடுகெழு சிறப்பின் பெரியோர் மல்கியபாடல்சால் சிறப்பின் பட்டினப் பாக்கமும்,இருபெரு வேந்தர் முனையிடம் போலஇருபால் பகுதியின் இடைநிலம் ஆகியகடைகால் யாத்த மிடைமரச் சோலைக்கொடுப்போர் ஓதையும் கொள்வோர் ஓதையும்நடுக்குஇன்றி நிலைஇய நாள்அங் காடியில்சித்திரைச் சித்திரத் திங்கள் சேர்ந்தெனவெற்றிவேல் மன்னற்கு உற்றதை ஒழிக்க எனத்தேவர் கோமான் ஏவலின் போந்தகாவல் பூதத்துக் கடைகெழு பீடிகைப்புழுக்கலும் நோலையும் விழுக்குஉடை மடையும்பூவும் புகையும் பொங்கலும் சொரிந்துதுணங்கையர் குரவையர் அணங்குஎழுந்து ஆடிப்பெருநில மன்னன் இருநிலம் அடங்கலும்பசியும் பிணியும் பகையும் நீங்கிவசியும் வளனும் சுரக்க என வாழ்த்திமாதர்க் கோலத்து வலவையின் உரைக்கும்மூதிற் பெண்டிர் ஓதையின் பெயர,மருவூர் மருங்கின் மறம்கொள் வீரரும்பட்டின மருங்கின் படைகெழு மாக்களும்முந்தச் சென்று முழுப்பலி பீடிகைவெந்திறல் மன்னற்கு உற்றதை ஒழிக்கவெனப்பலிக்கொடை புரிந்தோர் வலிக்குவரம்பு ஆகவெனக்கல்உமிழ் கவணினர் கழிப்பிணிக் கறைத்தோல்பல்வேல் பரப்பினர் மெய்உறத் தீண்டிஆர்த்துக் களம்கொண்டோ ர் ஆர்அமர் அழுவத்துச்சூர்த்துக் கடைசிவந்த சுடுனோக்குக் கருந்தலைவெற்றி வேந்தன் கொற்றம் கொள்கவெனநற்பலி பீடிகை நலம்கொள வைத்துஆங்குஉயிர்ப்பலி உண்ணும் உருமுக்குரல் முழக்கத்துமயிர்க்கண் முரசொடு வான்பலி ஊட்டி,இருநில மருங்கின் பொருநரைப் பெறாஅச்செருவெங் காதலின் திருமா வளவன்வாளும் குடையும் மயிர்க்கண் முரசும்நாளொடு பெயர்த்து நண்ணார்ப் பெறுகஇம்மண்ணக மருங்கின்என் வலிகெழு தோள்எனப்புண்ணியத் திசைமுகம் போகிய அந்நாள்அசைவுஇல் ஊக்கத்து நசைபிறக்கு ஒழியப்பகைவிலக் கியதுஇப் பயம்கெழு மலைஎனஇமையவர் உறையும் சிமையப் பிடர்த்தலைக்கொடுவரி ஒற்றிக் கொள்கையின் பெயர்வோற்கு,மாநீர் வேலி வச்சிர நன்னாட்டுக்கோன்இறை கொடுத்த கொற்றப் பந்தரும்மகதநன் நாட்டு வாள்வாய் வேந்தன்பகைபுறத்துக் கொடுத்த பட்டிமண் டபமும்,அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்தநிவந்துஓங்கு மரபின் தோரண வாயிலும்பொன்னினும் மணியினும் புனைந்தன ஆயினும்நுண்வினைக் கம்மியர் காணா மரபின,துயர்நீங்கு சிறப்பின்அவர் தொல்லோர் உதவிக்குமயன்விதித்துக் கொடுத்த மரபின, இவைதாம்ஒருங்குடன் புணர்ந்துஆங்கு உயர்ந்தோர் ஏத்தும்அரும்பெறல் மரபின் மண்டபம் அன்றியும்,வம்ப மாக்கள் தம்பெயர் பொறித்தகண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதிக்கடைமுக வாயிலும் கருந்தாழ்க் காவலும்உடையோர் காவலும் ஒரீஇய ஆகிக்கட்போர் உளர்எனின் கடுப்பத் தலைஏற்றிக்கொட்பின் அல்லது கொடுத்தல் ஈயாதுஉள்ளுநர்ப் பனிக்கும் வெள்ளிடை மன்றமும்,கூனும் குறளும் ஊமும் செவிடும்அழுகுமெய் யாளரும் முழுகினர் ஆடிப்பழுதுஇல் காட்சி நன்னிறம் பெற்றுவலம்செயாக் கழியும் இலஞ்சி மன்றமும்,வஞ்சம் உண்டு மயல்பகை உற்றோர்நஞ்சம் உண்டு நடுங்குதுயர் உற்றோர்அழல்வாய் நாகத்து ஆர்எயிறு அழுந்தினர்கழல்கண் கூளிக் கடுநவைப் பட்டோ ர்சுழல வந்து தொழத்துயர் நீங்கும்நிழல்கால் நெடுங்கல் நின்ற மன்றமும்,தவம்மறைந்து ஒழுகும் தன்மை இலாளர்அவம்மறைந்து ஒழுகும் அலவல் பெண்டிர்அறைபோகு அமைச்சர் பிறர்மனை நயப்போர்பொய்க்கரி யாளர் புறங்கூற் றாளர்என்கைக்கொள் பாசத்துக் கைப்படு வோர்எனக்காதம் நான்கும் கடுங்குரல் எடுப்பிப்பூதம் புடைத்துஉணும் பூத சதுக்கமும்,அரைசுகோல் கோடினும் அறம்கூறு அவையத்துஉரைநூல் கோடி ஒருதிறம் பற்றினும்நாவொடு நவிலாது நவைநீர் உகுத்துப்பாவைநின்று அழுஉம் பாவை மன்றமும்,மெய்வகை உணர்ந்த விழுமியோர் ஏத்தும்ஐவகை மன்றத்தும் அரும்பலி உறீஇ,வச்சிரக் கோட்டத்து மணம்கெழு முரசம்கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றி,வால்வெண் களிற்றுஅரசு வயங்கிய கோட்டத்துக்கால்கோள் விழவின் கடைநிலை சாற்றித்தங்கிய கொள்கைத் தருநிலைக் கோட்டத்துமங்கல நெடுங்கொடி வான்உற எடுத்து,மரகத மணியொடு வயிரம் குயிற்றிப்பவளத் திரள்கால் பைம்பொன் வேதிகைநெடுநிலை மாளிகைக் கடைமுகத்து யாங்கணும்கிம்புரிப் பகுவாய்க் கிளர்முத்து ஒழுக்கத்துமங்கலம் பொறித்த மகர வாசிகைத்தோரணம் நிலைஇய தோம்அறு பசும்பொன்பூரண கும்பத்துப் பொலிந்த பாலிகைபாவை விளக்குப் பசும்பொன் படாகைதூமயிர்க் கவரி சுந்தரச் சுண்ணத்துமேவிய கொள்கை வீதியில் செறிந்துஆங்கு,ஐம்பெருங் குழுவும் எண்பேர் ஆயமும்அரச குமரரும் பரத குமரரும்கவர்ப்பரிப் புரவியர் களிற்றின் தொகுதியர்இவர்ப்பரித் தேரினர் இயைந்துஒருங்கு ஈண்டிஅரைசுமேம் படீஇய அகனிலை மருங்கில்உரைசால் மன்னன் கொற்றம் கொள்கெனமாஇரு ஞாலத்து மன்உயிர் காக்கும்ஆயிரத்து ஓர்எட்டு அரசுதலைக் கொண்டதண்நறுங் காவிரித் தாதுமலி பெருந்துறைப்புண்ணிய நல்நீர் பொன்குடத்து ஏந்திமண்ணகம் மருள வானகம் வியப்பவிண்ணவர் தலைவனை விழுநீர் ஆட்டி,பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்வால்வளை மேனி வாலியோன் கோயிலும்நீல மேனி நெடியோன் கோயிலும்மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்மாமுது முதல்வன் வாய்மையின் வழாஅநான்மறை மரபின் தீமுறை ஒருபால்,நால்வகைத் தேவரும் மூவறு கணங்களும்பால்வகை தெரிந்த பகுதித் தோற்றத்துவேறுவேறு கடவுளர் சாறுசிறந்து ஒருபால்,அறவோர் பள்ளியும் அறன்ஓம் படையும்புறநிலைக் கோட்டத்துப் புண்ணியத் தானமும்திறவோர் உரைக்கும் செயல்சிறந்து ஒருபால்,கொடித்தேர் வேந்தனொடு கூடா மன்னர்அடித்தளை நீக்க அருள்சிறந்து ஒருபால்,கண்ணு ளாளர் கருவிக் குயிலுவர்பண்யாழ்ப் புலவர் பாடல் பாணரொடுஎண்அருஞ் சிறப்பின் இசைசிறந்து ஒருபால்,முழவுக்கண் துயிலாது முடுக்கரும் வீதியும்விழவுக்களி சிறந்த வியலுள் ஆங்கண்காதல் கொழுநனைப் பிரிந்துஅலர் எய்தாமாதர்க் கொடுங்குழை மாதவி தன்னொடுஇல்வளர் முல்லை மல்லிகை மயிலைதாழிக் குவளை சூழ்செங் கழுநீர்பயில்பூங் கோதைப் பிணையலிற் பொலிந்துகாமக் களிமகிழ்வு எய்திக் காமர்பூம்பொதி நறுவிரைப் பொழில்ஆட்டு அமர்ந்துநாள்மகிழ் இருக்கை நாள்அங் காடியில்பூமலி கானத்துப் புதுமணம் புக்குப்புகையும் சாந்தும் புலராது சிறந்துநகையாடு ஆயத்து நன்மொழி திளைத்துக்குரல்வாய்ப் பாணரொடு நகரப் பரத்தரொடுதிரிதரு மரபின் கோவலன் போலஇளிவாய் வண்டினொடு இன்இள வேனிலொடுமலய மாருதம் திரிதரு மறுகில்,கருமுகில் சுமந்து குறுமுயல் ஒழித்துஆங்குஇருகருங் கயலொடு இடைக்குமிழ் எழுதிஅங்கண் வானத்து அரவுப்பகை அஞ்சித்திங்களும் ஈண்டுத் திரிதலும் உண்டுகொல்.நீர்வாய் திங்கள் நீள்நிலத்து அமுதின்சீர்வாய் துவலைத் திருநீர் மாந்திமீன்ஏற்றுக் கொடியோன் மெய்பெற வளர்த்தவான வல்லி வருதலும் உண்டுகொல்.இருநில மன்னற்குப் பெருவளம் காட்டத்திருமகள் புகுந்ததுஇச் செழும்பதி ஆம்எனஎரிநிறத்து இலவமும் முல்லையும் அன்றியும்கருநெடுங் குவளையும் குமிழும் பூத்துஆங்குஉள்வரி கோலத்து உறுதுணை தேடிக்கள்ளக் கமலம் திரிதலும் உண்டுகொல்.மன்னவன் செங்கோல் மறுத்தல் அஞ்சிப்பல்உயிர் பருகும் பகுவாய்க் கூற்றம்ஆண்மையில் திரிந்துதன் அருந்தொழில் திரியாதுநாண்உடைக் கோலத்து நகைமுகம் கோட்டிப்பண்மொழி நரம்பின் திவவுயாழ் மிழற்றிப்பெண்மையில் திரியும் பெற்றியும் உண்டுஎன,உருவி லாளன் ஒருபெருஞ் சேனைஇகல்அமர் ஆட்டி எதிர்நின்று விலக்கிஅவர்எழுதுவரி கோலம் முழுமெயும் உறீஇவிருந்தொடு புக்க பெருந்தோள் கணவரொடுஉடன்உறைவு மரீஇ ஒழுக்கொடு புணர்ந்தவடமீன் கற்பின் மனையுறை மகளிர்மாதர்வாள் முகத்து மணித்தோட்டுக் குவளைப்போது புறங்கொடுத்துப் போகிய செங்கடைவிருந்தின் தீர்ந்திலது ஆயின் யாவதும்மருந்தும் தரும்கொல்இம் மாநில வரைப்புஎனக்கையற்று நடுங்கும் நல்வினை நடுநாள்:உள்அகம் நறுந்தாது உறைப்பமீது அழிந்துகள்உக நடுங்கும் கழுநீர் போலக்கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும்உள்நிறை கரந்துஅகத்து ஒளித்துநீர் உகுத்தனஎண்ணுமுறை இடத்தினும் வலத்தினும் துடித்தனவிண்ணவர் கோமான் விழவுநாள் அகத்துஎன்.
Share

விளக்கம்

இந்திர விழவு கதையின் ஒரு நிகழ்வு; ஆனால் இந்த அத்தியாயம் அதை ஒரு சமூகப் பனோராமாவாகப் பயன்படுத்துகிறது. மாட வீதிகள், கடைத்தெருக்கள், கூத்தியர், வந்து கூடும் மக்கள் — புகரின் முழு உடலும் இங்கே காட்சிக்கு வருகிறது.

விழாவின் மகிழ்ச்சிக்கு நடுவே, கண்ணகியின் கருங்கண்ணும் மாதவியின் செங்கண்ணும் நீர் உகுப்பதாகப் பக்கம் முடிகிறது. ஊர் கொண்டாடும்போது இருவர் மட்டும் அழுகிறார்கள் — இந்த முரண்தான் இந்தக் காதையின் உண்மையான பொருள்.