Kadai 26 · Silappathikaram · Ilango Adigal
காட்சிக் காதை
மாநீர் வேலிக் கடம்பெறிந்து இமயத்துவானவர் மருள மலைவிற் பூட்டியவானவர் தோன்றல் வாய்வாட் கோதைவிளங்கில வந்தி வெள்ளி மாடத்துஇளங்கோ வேண்மா ளுடனிருந் தருளித்துஞ்சா முழவின் அருவி ஒலிக்கும்மஞ்சுசூழ் சோலை மலைகாண் குவமெனப்பைந்தொடி ஆயமொடு பரந்தொருங் கீண்டிவஞ்சி முற்றம் நீங்கிச் செல்வோன்வளமலர்ப் பூம்பொழில் வானவர் மகளிரொடுவிளையாட்டு விரும்பிய விறல்வேல் வானவன்பொலம்பூங் காவும் புனல்யாற்றுப் பரப்பும்இலங்குநீர்த் துருத்தியும் இளமரக் காவும்அரங்கும் பள்ளியும் ஒருங்குடன் பரப்பிஒருநூற்று நாற்பது யோசனை விரிந்தபெருமால் களிற்றுப் பெயர்வோன் போன்றுகோங்கம் வேங்கை தூங்கிணர்க் கொன்றைநாகம் திலகம் நறுங்கா ழாரம்உதிர்பூம் பரப்பின் ஒழுகுபுனல் ஒளித்துமதுகரம் ஞிமிறொடு வண்டினம் பாடநெடியோன் மார்பி லாரம் போன்றுபெருமலை விலங்கிய பேரியாற் றடைகரைஇடுமண லெக்கர் இயைந்தொருங் கிருப்பக்குன்றக் குரவையொடு கொடிச்சியர் பாடலும்வென்றிச் செவ்வேள் வேலன் பாணியும்தினைக்குறு வள்ளையும் புனத்தெழு விளியும்நறவுக்கண் ணுடைத்த குறவ ரோதையும்பறையிசை அருவிப் பயங்கெழும் ஓதையும்புலியொடு பொரூஉம் புகர்முக வோதையும்கலிகெழு மீமிசைச் சேணோன் ஓதையும்பயம்பில்வீழ் யானைப் பாக ரோதையும்இயங்குபடை யரவமோ டியாங்கணு மொலிப்பஅளந்துகடை யறியா அருங்கலம் சுமந்துவளந்தலை மயங்கிய வஞ்சி முற்றத்துஇறைமகன் செவ்வி யாங்கணும் பெறாதுதிறைசுமந்து நிற்கும் தெவ்வர் போலயானைவெண் கோடும் அகிலின் குப்பையும்மான்மயிர்க் கவரியும் மதுவின் குடங்களும்சந்தனக் குறையுஞ் சிந்துரக் கட்டியும்அஞ்சனத் திரளும் அணியரி தாரமும்ஏல வல்லியும் இருங்கறி வல்லியும்கூவை நூறுங் கொழுங்கொடிக் கவலையும்தெங்கின் பழனும் தேமாங் கனியும்பைங்கொடிப் படலையும் பலவின் பழங்களும்காயமும் கரும்பும் பூமலி கொடியும்கொழுந்தாட் கமுகின் செழுங்குலைத் தாறும்பெருங்குலை வாழையின் இருங்கனித் தாறும்ஆளியி னணங்கும் அரியின் குருளையும்வாள்வரிப் பறழும் மதகரிக் களபமும்குரங்கின் குட்டியுங் குடாவடி உளியமும்வரையாடு வருடையும் மடமான் மறியும்காசறைக் கருவும் மாசறு நகுலமும்பீலி மஞ்ஞையும் நாவியின் பிள்ளையும்கானக் கோழியும் தேன்மொழிக் கிள்ளையும்மலைமிசை மாக்கள் தலைமிசைக் கொண்டாங்குஏழ்பிறப் படியேம் வாழ்கநின் கொற்றம்கான வேங்கைக் கீழோர் காரிகைதான்முலை இழந்து தனித்துய ரெய்திவானவர் போற்ற மன்னோடும் கூடிவானவர் போற்ற வானகம் பெற்றனள்எந்நாட் டாள்கொல் யார்மகள் கொல்லோநின்னாட்டு யாங்கள் நினைப்பினும் அறியேம்பன்னூ றாயிரத் தாண்டுவா ழியரெனமண்களி நெடுவேல் மன்னவற் கண்டுகண்களி மயக்கத்துக் காதலோ டிருந்ததண்டமி ழாசான் சாத்தனிஃ துரைக்கும்ஒண்டொடி மாதர்க் குற்றதை யெல்லாம்திண்டிறல் வேந்தே செப்பக் கேளாய்தீவினைச் சிலம்பு காரண மாகஆய்தொடி அரிவை கணவற் குற்றதும்வலம்படு தானை மன்னன் முன்னர்ச்சிலம்பொடு சென்ற சேயிழை வழக்கும்செஞ்சிலம் பெறிந்து தேவி முன்னர்வஞ்சினம் சாற்றிய மாபெரும் பத்தினிஅஞ்சி லோதி அறிகெனப் பெயர்ந்துமுதிரா முலைமுகத் தெழுந்த தீயின்மதுரை மூதூர் மாநகர் சுட்டதும்அரிமா னேந்திய அமளிமிசை இருந்ததிருவீழ் மார்பின் தென்னர் கோமான்தயங்கிணர்க் கோதை தன்றுயர் பொறாஅன்மயங்கினன் கொல்லென மலரடி வருடித்தலைத்தாள் நெடுமொழி தன்செவி கேளாள்கலக்கங் கொள்ளாள் கடுந்துயர் பொறாஅள்மன்னவன் செல்வுழிச் செல்க யானெனத்தன்னுயிர் கொண்டவ னுயிர்தே டினள்போல்பெருங்கோப் பெண்டும் ஒருங்குடன் மாய்ந்தனள்கொற்ற வேந்தன் கொடுங்கோல் தன்மைஇற்றெனக் காட்டி இறைக்குரைப் பனள்போல்தன்னாட் டாங்கண் தனிமையிற் செல்லாள்நின்னாட் டகவயின் அடைந்தனள் நங்கையென்றுஒழிவின் றுரைத்தீண் டூழி யூழிவழிவழிச் சிறக்கநின் வலம்படு கொற்றமெனத்தென்னர் கோமான் தீத்திறங் கேட்டமன்னர் கோமான் வருந்தினன் உரைப்போன்எம்மோ ரன்ன வேந்தர்க் குற்றசெம்மையின் இகந்தசொற் செவிப்புலம் படாமுன்உயிர்பதிப் பெயர்த்தமை உறுக ஈங்கெனவல்வினை வளைத்த கோலை மன்னவன்செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோ லாக்கியதுமழைவளங் கரப்பின் வான்பே ரச்சம்பிழையுயி ரெய்திற் பெரும்பே ரச்சம்குடிபுர வுண்டுங் கொடுங்கோ லஞ்சிமன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல்துன்ப மல்லது தொழுதக வில்லெனத்துன்னிய துன்பம் துணிந்துவந் துரைத்தநன்னூற் புலவற்கு நன்கனம் உரைத்தாங்குஉயிருடன் சென்ற ஒருமகள் தன்னினும்செயிருடன் வந்தவிச் சேயிழை தன்னினும்நன்னுதல் வியக்கும் நலத்தோர் யாரெனமன்னவன் உரைப்ப மாபெருந் தேவிகாதலன் துன்பம் காணாது கழிந்தமாதரோ பெருந்திரு வுறுக வானகத்துஅத்திறம் நிற்கநம் அகல்நா டடைந்தவிப்பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டுமெனமாலை வெண்குடை மன்னவன் விரும்பிநூலறி புலவரை நோக்க ஆங்கவர்ஒற்கா மரபிற் பொதியி லன்றியும்விற்றலைக் கொண்ட வியன்பே ரிமயத்துக்கற்கால் கொள்ளினுங் கடவு ளாகும்கங்கைப்பேர் யாற்றினும் காவிரிப் புனலினும்தங்கிய நீர்ப்படை தகவோ உடைத்தெனப்பொதியிற் குன்றத்துக் கற்கால் கொண்டுமுதுநீர்க் காவிரி முன்றுறைப் படுத்தல்மறத்தகை நெடுவா ளெங்குடிப் பிறந்தோர்க்குச்சிறப்பொடு வரூஉஞ் செய்கையோ அன்றுபுன்மயிர்ச் சடைமுடிப் புலரா வுடுக்கைமுந்நூல் மார்பின் முத்தீச் செல்வத்துஇருபிறப் பாளரொடு பெருமலை யரசன்மடவதின் மாண்ட மாபெரும் பத்தினிக்கடவு ளெழுதவோர் கல்தா ரானெனின்வழிநின்று பயவா மாண்பில் வாழ்க்கைகழிந்தோ ரொழிந்தோர்க்குக் காட்டிய காஞ்சியும்முதுகுடிப் பிறந்த முதிராச் செல்வியைமதிமுடிக் களித்த மகட்பாற் காஞ்சியும்தென்றிசை யென்றன் வஞ்சியொடு வடதிசைநின்றெதி ரூன்றிய நீள்பெருங் காஞ்சியும்நிலவுக்கதி ரளைந்த நீள்பெருஞ் சென்னிஅலர்மந் தாரமொடு ஆங்கயல் மலர்ந்தவேங்கையொடு தொடுத்த விளங்குவிறல் மாலைமேம்பட மலைதலும் காண்குவல் ஈங்கெனக்குடைநிலை வஞ்சியும் கொற்ற வஞ்சியும்நெடுமா ராயம் நிலைஇய வஞ்சியும்வென்றார் விளங்கிய வியன்பெரு வஞ்சியும்பின்றாச் சிறப்பிற் பெருஞ்சோற்று வஞ்சியும்குன்றாச் சிறப்பிற் கொற்ற வள்ளையும்வட்கர் போகிய வான்பனந் தோட்டுடன்புட்கைச் சேனை பொலியச் சூட்டிப்பூவா வஞ்சிப் பொன்னகர்ப் புறத்தென்வாய்வாள் மலைந்த வஞ்சிசூ டுதுமெனப்பல்யாண்டு வாழ்கநின் கொற்றம் ஈங்கெனவில்லவன் கோதை வேந்தற் குரைக்கும்நும்போல் வேந்தர் நும்மோ டிகலிக்கொங்கர்செங் களத்துக் கொடுவரிக் கயற்கொடிபகைப்புறத்துத் தந்தன ராயினும் ஆங்கவைதிகைமுக வேழத்தின் செவியகம் புக்கனகொங்கணர் கலிங்கர் கொடுங்கரு நாடர்பங்களர் கங்கர் பல்வேற் கட்டியர்வடவா ரியரொடு வண்டமிழ் மயக்கத்துன்கடமலை வேட்டமென் கட்புலம் பிரியாதுகங்கைப் பேர்யாற்றுக் கடும்புனல் நீத்தம்எங்கோ மகளை ஆட்டிய அந்நாள்ஆரிய மன்னர் ஈரைஞ் ஞூற்றுவர்க்குஒருநீ யாகிய செருவெங் கோலம்கண்விழித்துக் கண்டது கடுங்கட் கூற்றம்இமிழ்கடல் வேலியைத் தமிழ்நா டாக்கியஇதுநீ கருதினை யாயின் ஏற்பவர்முதுநீ ருலகில் முழுவது மில்லைஇமய மால்வரைக்கு எங்கோன் செல்வதுகடவு ளெழுதவோர் கற்கே யாதலின்வடதிசை மருங்கின் மன்னர்க் கெல்லாம்தென்றமிழ் நன்னாட்டுச் செழுவிற் கயற்புலிமண்டலை யேற்ற வரைக வீங்கெனநாவலந் தண்பொழில் நண்ணார் ஒற்றுநம்காவல் வஞ்சிக் கடைமுகம் பிரியாவம்பணி யானை வேந்தர் ஒற்றேதஞ்செவிப் படுக்குந் தகைமைய வன்றோஅறைபறை யென்றே அழும்பில்வே ளுரைப்பநிறையருந் தானை வேந்தனும் நேர்ந்துகூடார் வஞ்சிக் கூட்டுண்டு சிறந்தவாடா வஞ்சி மாநகர் புக்கபின்வாழ்க எங்கோ மன்னவர் பெருந்தகைஊழிதொ றூழி யுலகங் காக்கெனவிற்றலைக் கொண்ட வியன்பே ரிமயத்தோர்கற்கொண்டு பெயருமெங் காவலன் ஆதலின்வடதிசை மருங்கின் மன்ன ரெல்லாம்இடுதிறை கொடுவந் தெதிரீ ராயின்கடற்கடம் பெறிந்த கடும்போர் வார்த்தையும்விடர்ச்சிலை பொறித்த வியன்பெரு வார்த்தையும்கேட்டு வாழுமின் கேளீ ராயின்தோட்டுணை துறக்கும் துறவொடு வாழுமின்தாழ்கழல் மன்னன் தன்றிரு மேனிவாழ்க சேனா முகமென வாழ்த்திஇறையிகல் யானை யெருத்தத் தேற்றிஅறைபறை எழுந்ததால் அணிநகர் மருங்கென்.
விளக்கம்
இந்தக் காதை வஞ்சியில் நிற்கிறது. சேரன் செங்குட்டுவனின் அவையில் ஒற்றர் வந்து ஆரிய மன்னர்களின் செய்தியைச் சொல்கிறார்கள்; இமயத்திலிருந்து கல் கொண்டு வருவதே அவன் முடிவு என்று தெரிகிறது.
கொங்கர் செங்களத்தில் வென்ற வெற்றியும், கங்கைக் கரையில் நடந்த போரும் நினைவு கூரப்படுகின்றன. இறுதியில் 'அறைபறை எழுந்ததால் அணிநகர் மருங்கு' என்று முரசு அறைவதோடு பக்கம் முடிகிறது — கண்ணகிக்குக் கோயில் எழுப்பும் போர் இங்கே தொடங்குகிறது.