கடவுள் எழுதிய நெடு நிலைக் கந்தின்குடவயின் அமைத்த நெடு நிலை வாயில்முதியாள் கோட்டத்து அகவயின் கிடந்தமது மலர்க் குழலி மயங்கினள் எழுந்துவிஞ்சையன் செய்தியும் வென் வேல் வேந்தன்மைந்தற்கு உற்றதும் மன்றப் பொதியில்கந்து உடை நெடு நிலைக் கடவுள் பாவைஅங்கு அவற்கு உரைத்த அற்புதக் கிளவியும்கேட்டனள் எழுந்து 'கெடுக இவ் உரு' எனதோட்டு அலர்க் குழலி உள்வரி நீங்கித்'திட்டிவிடம் உண நின் உயிர் போம் நாள்கட்டு அழல் ஈமத்து என் உயிர் சுட்டேன்உவவன மருங்கில் நின்பால் உள்ளம்தவிர்விலேன் ஆதலின் தலைமகள் தோன்றிமணிபல்லவத்திடை என்னை ஆங்கு உய்த்துபிணிப்பு அறு மாதவன் பீடிகை காட்டிஎன் பிறப்பு உணர்ந்த என்முன் தோன்றிஉன் பிறப்பு எல்லாம் ஒழிவு இன்று உரைத்தலின்பிறந்தோர் இறத்தலும் இறந்தோர் பிறத்தலும்அறம் தரு சால்பும் மறம் தரு துன்பமும்யான் நினக்கு உரைத்து நின் இடர் வினை ஒழிக்கக்காயசண்டிகை வடிவு ஆனேன் காதல!வை வாள் விஞ்சையன் மயக்கு உறு வெகுளியின்வெவ் வினை உருப்ப விளிந்தனையோ!' எனவிழுமக் கிளவியின் வெய்து உயிர்த்துப் புலம்பிஅழுதனள் ஏங்கி அயாஉயிர்த்து எழுதலும்'செல்லல் செல்லல்! சேயரி நெடுங்கண்!அல்லி அம் தாரோன் தன்பால் செல்லல்!நினக்கு இவன் மகனாத் தோன்றியதூஉம்மனக்கு இனியாற்கு நீ மகள் ஆயதூஉம்பண்டும் பண்டும் பல் பிறப்பு உளவால்கண்ட பிறவியே அல்ல காரிகைதடுமாறு பிறவித் தாழ்தரு தோற்றம்விடுமாறு முயல்வோய்! விழுமம் கொள்ளேல்!என்று இவை சொல்லி, இருந் தெய்வம் உரைத்தலும்பொன் திகழ் மேனிப் பூங்கொடி பொருந்திப்'பொய்யா நாவொடு இப் பொதியிலில் பொருந்தியதெய்வம் நீயோ? திருவடி தொழுதேன்விட்ட பிறப்பின் வெய்து உயிர்த்து ஈங்கு இவன்திட்டிவிடம் உணச் செல் உயிர் போயதும்நெஞ்சு நடுங்கி நெடுந் துயர் கூர யான்விஞ்சையன் வாளின் இவன் விளிந்ததூஉம்அறிதலும் அறிதியோ? அறிந்தனை ஆயின்பெறுவேன் தில்ல நின் பேர் அருள் ஈங்கு!' என'ஐ அரி நெடுங் கண் ஆய் இழை! கேள்' எனத்தெய்வக் கிளவியில் தெய்வம் கூறும்'காயங்கரை எனும் பேர் யாற்று அடைகரைமாயம் இல் மாதவன் வரு பொருள் உரைத்துமருள் உடை மாக்கள் மன மாசு கழூஉம்பிரமதருமனைப் பேணினிராகி"அடிசில் சிறப்பு யாம் அடிகளுக்கு ஆக்குதல்விடியல் வேலை வேண்டினம்" என்றலும்மாலை நீங்க மனம் மகிழ்வு எய்திகாலை தோன்ற வேலையின் வரூஉநடைத் திறத்து இழுக்கி நல் அடி தளர்ந்துமடைக் கலம் சிதைய வீழ்ந்த மடையனைசீலம் நீங்காச் செய் தவத்தோர்க்குவேலை பிழைத்த வெகுளி தோன்றத்தோளும் தலையும் துணிந்து வேறாகவாளின் தப்பிய வல் வினை அன்றேவிரா மலர்க் கூந்தல் மெல் இயல் நின்னோடுஇராகுலன் தன்னை இட்டு அகலாதது"தலைவன் காக்கும் தம் பொருட்டு ஆகியஅவல வெவ் வினை" என்போர் அறியார்அறம் செய் காதல் அன்பினின் ஆயினும்மறம் செய்துளது எனின் வல் வினை ஒழியாதுஆங்கு அவ் வினை வந்து அணுகும்காலைத்தீங்கு உறும் உயிரே செய் வினை மருங்கின்மீண்டுவரு பிறப்பின் மீளினும் மீளும்ஆங்கு அவ் வினை காண் ஆய் இழை கணவனைஈங்கு வந்து இவ் இடர் செய்து ஒழிந்ததுஇன்னும் கேளாய் இளங் கொடி நல்லாய்!மன்னவன் மகற்கு வருந்து துயர் எய்திமாதவர் உணர்த்திய வாய்மொழி கேட்டுக்காவலன் நின்னையும் காவல்செய்து ஆங்கு இடும்இடு சிறை நீக்கி இராசமாதேவிகூட வைக்கும் கொட்பினள் ஆகிமாதவி மாதவன் மலர் அடி வணங்கித்தீது கூற அவள் தன்னொடும் சேர்ந்துமாதவன் உரைத்த வாய்மொழி கேட்டுகாதலி நின்னையும் காவல் நீக்குவள்அரைசு ஆள் செல்வத்து ஆபுத்திரன்பால்புரையோர்ப் பேணிப் போகலும் போகுவைபோனால் அவனொடும் பொருளுரை பொருந்திமாநீர் வங்கத்து அவனொடும் எழுந்துமாயம் இல் செய்தி மணிபல்லவம் எனும்தீவகத்து இன்னும் சேறலும் உண்டால்தீவதிலகையின் தன் திறம் கேட்டுசாவக மன்னன் தன் நாடு அடைந்த பின்ஆங்கு அத் தீவம் விட்டு அருந் தவன் வடிவு ஆய்பூங் கொடி வஞ்சி மா நகர் புகுவைஆங்கு அந் நகரத்து அறி பொருள் வினாவும்ஓங்கிய கேள்வி உயர்ந்தோர் பலரால்"இறைவன் எம் கோன் எவ் உயிர் அனைத்தும்முறைமையின் படைத்த முதல்வன்" என்போர்களும்"தன் உரு இல்லோன் பிற உருப் படைப்போன்அன்னோன் இறைவன் ஆகும்" என்போர்களும்"துன்ப நோன்பு இத் தொடர்ப்பாடு அறுத்து ஆங்குஇன்ப உலகு உச்சி இருத்தும்" என்போர்களும்"பூத விகாரப் புணர்ப்பு" என்போர்களும்பல் வேறு சமயப் படிற்று உரை எல்லாம்அல்லி அம் கோதை! கேட்குறும் அந் நாள்"இறைவனும் இல்லை இறந்தோர் பிறவார்அறனோடு என்னை?" என்று அறைந்தோன் தன்னைப்பிறவியும் அறவியும் பெற்றியின் உணர்ந்தநறு மலர்க் கோதை! எள்ளினை நகுதி"எள்ளினை போலும் இவ் உரை கேட்டு! இங்குஒள்ளியது உரை!" என உன் பிறப்பு உணர்த்துவை"ஆங்கு நிற்கொணர்ந்த அருந் தெய்வம் மயக்ககாம்பு அன தோளி! கனா மயக்கு உற்றனை"என்று அவன் உரைக்கும் இளங் கொடி நல்லாய்!"அன்று" என்று அவன் முன் அயர்ந்து ஒழிவாயலை"தீவினை உறுதலும் செத்தோர் பிறத்தலும்வாயே" என்று மயக்கு ஒழி மடவாய்வழு அறு மரனும் மண்ணும் கல்லும்எழுதிய பாவையும் பேசா என்பதுஅறிதலும் அறிதியோ? அறியாய்கொல்லோ?அறியாய் ஆயின் ஆங்கு அது கேளாய்!முடித்து வரு சிறப்பின் மூதூர் யாங்கணும்கொடித் தேர் வீதியும் தேவர் கோட்டமும்முது மர இடங்களும் முது நீர்த் துறைகளும்பொதியிலும் மன்றமும் பொருந்துபு நாடிகாப்பு உடை மா நகர்க் காவலும் கண்ணியாப்பு உடைத்தாக அறிந்தோர் வலித்துமண்ணினும் கல்லினும் மரத்தினும் சுவரினும்கண்ணிய தெய்வதம் காட்டுநர் வகுக்கஆங்கு அத் தெய்வதம் அவ் இடம் நீங்காஊன் கண்ணினார்கட்கு உற்றதை உரைக்கும்என் திறம் கேட்டியோ இளங் கொடி நல்லாய்!மன் பெருந் தெய்வ கணங்களின் உள்ளேன்!துவதிகன் என்பேன் தொன்று முதிர் கந்தின்மயன் எனக்கு ஒப்பா வகுத்த பாவையின்நீங்கேன் யான் என் நிலை அது கேளாய்மாந்தர் அறிவது வானவர் அறியார்ஓவியச்சேனன் என் உறு துணைத் தோழன்ஆவதை இந் நகர்க்கு ஆர் உரைத்தனரோ?அவனுடன் யான் சென்று ஆடு இடம் எல்லாம்உடன் உறைந்தார் போல் ஒழியாது எழுதிபூவும் புகையும் பொருந்துவ கொணர்ந்துநா நனி வருந்த என் நலம் பாராட்டலின்மணிமேகலை! யான் வரு பொருள் எல்லாம்துணிவுடன் உரைத்தேன் என் சொல் தேறு' என"தேறேன் அல்லேன் தெய்வக் கிளவிகள்ஈறு கடைபோக எனக்கு அருள்?" என்றலும்துவதிகன் உரைக்கும்' சொல்லலும் சொல்லுவேன்வருவது கேளாய் மடக் கொடி நல்லாய்!மன் உயிர் நீங்க மழை வளம் கரந்துபொன் எயில் காஞ்சி நகர் கவின் அழியஆங்கு அது கேட்டே ஆர் உயிர் மருந்தாய்ஈங்கு இம் முதியாள் இடவயின் வைத்ததெய்வப் பாத்திரம் செவ்விதின் வாங்கித்தையல்! நிற்பயந்தோர் தம்மொடு போகிஅறவணன் தானும் ஆங்கு உளன் ஆதலின்செறி தொடி! காஞ்சி மா நகர் சேர்குவைஅறவணன் அருளால் ஆய் தொடி! அவ் ஊர்ப்பிற வணம் ஒழிந்து நின் பெற்றியை ஆகிவறன் ஓடு உலகில் மழைவளம் தரூஉம்அறன் ஓடு ஏந்தி ஆர் உயிர் ஓம்புவைஆய் தொடிக்கு அவ் ஊர் அறனொடு தோன்றும்ஏது நிகழ்ச்சி யாவும் பல உளபிற அறம் உரைத்தோர் பெற்றிமை எல்லாம்அறவணன் தனக்கு நீ உரைத்த அந் நாள்தவமும் தருமமும் சார்பின் தோற்றமும்பவம் அறு மார்க்கமும் பான்மையின் உரைத்து"மற இருள் இரிய மன் உயிர் ஏம் உறஅற வெயில் விரித்து ஆங்கு அளப்பு இல் இருத்தியொடுபுத்த ஞாயிறு தோன்றும்காறும்செத்தும் பிறந்தும் செம்பொருள் காவாஇத் தலம் நீங்கேன் இளங்கொடி! யானும்தாயரும் நீயும் தவறு இன்றுஆகவாய்வதாக நின் மனப்பாட்டு அறம்!" எனஆங்கு அவன் உரைத்தலும் அவன் மொழி பிழையாய்பாங்கு இயல் நல் அறம் பலவும் செய்த பின்கச்சி முற்றத்து நின் உயிர் கடைகொளஉத்தர மகதத்து உறு பிறப்பு எல்லாம்ஆண் பிறப்பு ஆகி அருளறம் ஒழியாய்மாண்பொடு தோன்றி மயக்கம் களைந்துபிறர்க்கு அறம் அருளும் பெரியோன் தனக்குத்தலைச்சாவகன் ஆய் சார்பு அறுத்து உய்திஇன்னும் கேட்டியோ நல் நுதல் மடந்தை!ஊங்கண் ஓங்கிய உரவோன் தன்னைவாங்கு திரை எடுத்த மணிமேகலா தெய்வம்சாதுசக்கரற்கு ஆர் அமுது ஈத்தோய்!ஈது நின் பிறப்பு என்பது தௌிந்தேஉவவன மருங்கில் நின்பால் தோன்றிமணிபல்லவத்திடைக் கொணர்ந்தது கேள் எனதுவதிகன் உரைத்தலும் துயர்க் கடல் நீங்கிஅவதி அறிந்த அணி இழை நல்லாள்வலை ஒழி மஞ்ஞையின் மன மயக்கு ஒழிதலும்உலகு துயில் எழுப்பினன் மலர் கதிரோன் என்
Listen
Share
விளக்கம்
கந்திற் பாவை துவதிகன் பேசுகிறது: உதயகுமரனைக் கொன்றது காஞ்சனனின் வாள் அல்ல, ஊழ்வினை; மணிமேகலையின் முற்பிறப்பு முதல் இப்பிறம் வரை விளக்குகிறது.
கந்தின் பாவை பேசுவது அதிசயம்; ஆனால் அது சொல்வது மணிமேகலைக்கு ஆறுதல் அல்ல, காரணம். அடுத்து நடப்பதை — காவல், விடுதலை, காஞ்சிப் பயணம் — முன்கூட்டியே சொல்கிறது.