Verse 4113 · Thevaram · Thirugnanasambandar
Third Thirumurai · Thirukkazhumalam · Verse 2 of 11
திருக்கழுமலம் · 3.118.2
மின்னிய அரவும் வெறிமலர் பலவும் விரும்பிய திங்களுந் தங்குசென்னிய துடையான் தேவர்தம் பெருமான் சேயிழை யொடும்உறை விடமாம்பொன்னியன் மணியும் முரிகரி மருப்புஞ் சந்தமும் உந்துவன் றிரைகள்கன்னிய ராடக் கடலொலி மலியுங் கழுமல நகரென லாமே.