பாடல் 83 · திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் · வ. அழகியசொக்கநாத பிள்ளை

திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் 83 · நீராடற் பருவம்

காதலர் நறுங்குவளை காலில்விழ அடர்நெடுங்கட்கருங் குவளைசேப்பக்காமர்நா சியிலணியி முத்தஞ் சிவப்பக்கதிர்த்ததுவ ரிதழ்விளர்ப்பத்தாதலர் அலங்கல்புனன் மங்கைக்கும் எய்திடத்தணவிலின் பத்தமிழ்தருஞ்சடையனா ரருளமறை செப்புவரு ணத்துயர்வுதாங்குபுபல் கலைதோய்வறப்பாதலமெ லாமோதி வாம்குதிரை நீள்கயம்பற்றிமின் னரவமணிவான்படர்சந்தின் வலியபெரும் ஊடலைத் தீர்த்தருட்பரவையோடு சங்கமித்துப்பூதலம் புகழ்தரநம் ஆரூர ரிற்குலவுபொருநைநீ ராடியருளேபூசுரர் வழுத்துமுயர் கீசக வனத்திறைவிபொருநைநீ ராடியருளே
பகிர்