← இலக்கியம் பிரபந்த இலக்கியம்

96 வகைச் சிற்றிலக்கியங்கள்

ஒவ்வொரு வகைக்கும் ஒரு பக்கம்: அதன் இலக்கணம், யாப்பு, எடுத்துக்காட்டு நூல்கள்

பகிர்

பெருங்காப்பியங்கள் அல்லாத சிறிய இலக்கிய வடிவங்களைப் பிரபந்தங்கள் என்றும் சிற்றிலக்கியங்கள் என்றும் வழங்குவர். பிரபந்தம் என்பது நன்கு கட்டப்பட்டது எனப் பொருள்படும் வடசொல். ஒவ்வொரு வகைக்கும் பாடுபொருள், பாவகை, பாடல் எண்ணிக்கை ஆகியவற்றைப் பாட்டியல் நூல்கள் வரையறுக்கின்றன: பன்னிரு பாட்டியல், வெண்பாப் பாட்டியல், நவநீதப் பாட்டியல், வைத்தியநாத தேசிகரின் இலக்கண விளக்கம், பிரபந்த மரபியல், முத்துவீர உபாத்தியாயரின் முத்துவீரியம், பிரபந்த தீபிகை முதலியன. படிக்காசுப் புலவர் “தொண்ணூற்றாறு கோலப் பிரபந்தங்கள்” எனப் பாடியதிலிருந்தே பிரபந்தங்கள் தொண்ணூற்றாறு என்னும் எண் மரபாக நிலைத்தது.

பாட்டியல் நூல்கள் எண்ணிக்கையில் வேறுபடுகின்றன: பன்னிரு பாட்டியல் அறுபத்தெட்டு, பிரபந்த மரபியலும் முத்துவீரியமும் தொண்ணூற்றாறு, பிரபந்த தீபிகை தொண்ணூற்றெட்டு. இங்குள்ள பட்டியல் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி தரும் தொண்ணூற்றாறு பெயர்கள்; ஒவ்வொன்றின் விளக்கமும் மேற்கண்ட பாட்டியல் நூல்களின் நூற்பாக்களைத் தழுவியது. இத்தளத்தில் நூல்கள் சேர்க்கப்பட்ட வகைகள் முதலில் உள்ளன; புதிய நூல் சேரும்போது அதன் வகையும் தானே மேலே வரும்.

நூல்கள் உள்ள வகைகள் 16 வகைகள் · 86 நூல்கள்

மற்ற வகைகள் 80 வகைகள் · நூல்கள் விரைவில்

  1. 1அகப்பொருட்கோவைAgapporut Kovaiதலைவன் தலைவியின் காதல் வாழ்வைத் துறைதோறும் கோத்த நானூறு பாடல்கள்
  2. 2அங்கமாலைAngamaalaiஉடல் உறுப்புகளை வரிசையாகப் பாடும் மாலை
  3. 3அட்டமங்கலம்Attamangalamதலைவனைக் காக்குமாறு தெய்வத்தை வேண்டும் எட்டுப் பாடல்கள்
  4. 4அரசன்விருத்தம்Arasan Viruttamஓர் அரசனின் எழிலும் நாடும் வெற்றியும்
  5. 5அலங்காரபஞ்சகம்Alangara Panjagamஐந்து பாவகைகள் மாறி மாறி வரும் நூறு பாடல்கள்
  6. 6அனுராகமாலைAnuraga Maalaiகனவில் கண்ட காதலியைத் தோழனுக்கு உரைத்தல்
  7. 8இணைமணி மாலைInaimani Maalaiஇரண்டு பாவகைகள் இணையாகக் கோக்கப்படும் மாலை
  8. 9இயன்மொழி வாழ்த்துIyanmozhi Vaazhthuகுடிப்பெருமையைச் சொல்லி அரசனை வாழ்த்துதல்
  9. 10இரட்டைமணிமாலைIrattai Manimaalaiவெண்பாவும் கலித்துறையும் மாறி வரும் இருபது பாடல்கள்
  10. 13பவனிக்காதல்Pavanikkaadhalபவனி கண்ட பெண்ணின் காதல்
  11. 14உலாமடல்Ulamadalகனவில் கண்டவளுக்காக மடலேறுவேன் என்னும் தலைவன்
  12. 15உழத்திப்பாட்டுUzhathip Paattu (Pallu)உழவர் வாழ்வைப் பாடும் பள்ளு
  13. 16உழிஞைமாலைUzhinjai Maalaiபகைவரின் அரணை முற்றுகையிடுதல்
  14. 17உற்பவமாலைUrpava Maalaiதிருமாலின் பத்துப் பிறப்புகளைப் பாடி வேண்டுதல்
  15. 18ஊசல்Oosalஊஞ்சலாடும் பெண்கள் தலைவனைப் புகழ்தல்
  16. 19ஊர் நேரிசைOor Nerisaiதலைவனின் ஊரை நேரிசை வெண்பாக்களால் பாடுதல்
  17. 20ஊர்வெண்பாOor Venbaதலைவன் வரவால் ஊர் சிறக்க வாழ்த்துதல்
  18. 21ஊரின்னிசைOor Innisaiதலைவனின் ஊரை இன்னிசை வெண்பாக்களால் பாடுதல்
  19. 22எண்செய்யுள்En Seyyulபாடல் எண்ணிக்கையால் பெயர் பெறும் நூல்
  20. 24ஒருபா ஒருபதுOrupa Orupathuஒரே பாவகையில் பத்துப் பாடல்கள்
  21. 25ஒலியந்தாதிOli Andhadhiவண்ணச் சந்தம் ஒலிக்கும் முப்பது பாடல்கள்
  22. 26கடைநிலைKadainilaiஅரண்மனை வாயிலில் நிற்கும் புலவனின் வேண்டுகோள்
  23. 27கண்படைநிலைKanpadainilaiநாட்டைக் காத்த அரசனின் அமைதியான உறக்கம்
  24. 29காஞ்சிமாலைKaanchi Maalaiபடையெடுத்து வந்த பகைவரை எல்லையில் தடுத்தல்
  25. 30காப்புமாலைKaappu Maalaiஇறைவன் காக்க வேண்டும் என்னும் சில பாடல்கள்
  26. 31குழமகன்Kuzhamaganபெண்ணின் கையிலுள்ள ஆண் குழந்தையைப் புகழ்தல்
  27. 33கேசாதிபாதம்Kesadhipadhamமுடி முதல் அடி வரை வருணித்தல்
  28. 34கைக்கிளைKaikkilaiஒருதலைக் காதல்
  29. 35கையறுநிலைKaiyarunilaiதலைவனை இழந்தோரின் புலம்பல்
  30. 37சாதகம்Saadhagamதலைவனின் பிறப்புக் கோள்நிலையைப் பாடுதல்
  31. 38சிறுகாப்பியம்Sirukappiyamநாற்பொருளுள் சிலவற்றையே பாடும் காப்பியம்
  32. 39சின்னப்பூChinnappooஅரசனின் பத்துச் சின்னங்கள்
  33. 40செருக்களவஞ்சிSerukkala Vanjiபோர்க்களக் காட்சி
  34. 41செவியறிவுறூஉSeviyarivuruuஅரசனுக்குச் சான்றோர் கூறும் அறிவுரை
  35. 42தசாங்கத்தயல்Dasaangath Thayalஅரசனின் பத்து அங்கங்களை விருத்தத்தால் பாடுதல்
  36. 43தசாங்கப்பத்துDasaangap Paththuபத்து அங்கங்களைப் பத்து வெண்பாக்களால் பாடுதல்
  37. 44தண்டகமாலைDandaga Maalaiமுந்நூறு வெண்பாக்களின் மாலை
  38. 45தாண்டகம்Thaandagamஅறுசீர், எண்சீர் அடிகளில் இறைவனைப் பாடுதல்
  39. 46தாரகைமாலைThaaragai Maalaiவிண்மீன்களின் மாலை, கற்பின் சிறப்பு
  40. 47தானைமாலைThaanai Maalaiபடையின் முன்னணிக் கொடிப்படை
  41. 48எழுகூற்றிருக்கைEzhukootrirukkaiஎண்களால் படிக்கட்டுபோல் ஏறி இறங்கும் சொல்லணிப் பாடல்
  42. 49தும்பைமாலைThumbai Maalaiதும்பை சூடி நேருக்கு நேர் போர் செய்தல்
  43. 50துயிலெடை நிலைThuyiledai Nilaiஉறங்கும் தலைவனைத் துயில் எழுப்புதல்
  44. 51தூதுThoodhuகாதலன்பால் தூது அனுப்புதல்
  45. 53நயனப்பத்துNayanap Paththuகண்களைப் பத்துப் பாடல்களால் வருணித்தல்
  46. 54நவமணிமாலைNavamani Maalaiஒன்பது பாவகைகளின் மாலை
  47. 55நாமமாலைNaama Maalaiஆண்மகனின் புகழை வஞ்சிப்பாவால் பாடுதல்
  48. 56நாழிகைவெண்பாNaazhigai Venbaநாழிகைக்கு ஒன்றாக நிகழ்வுகளைப் பாடுதல்
  49. 60நொச்சிமாலைNochchi Maalaiமுற்றுகையிட்ட பகைவரிடமிருந்து மதிலைக் காத்தல்
  50. 62பதிற்றந்தாதிPathitrandhadhiபத்துப் பாடல்கள் அந்தாதித் தொடையில்
  51. 63பரணிParaniபோரில் ஆயிரம் யானைகளை வென்ற வீரனின் புகழ்
  52. 64பல்சந்தமாலைPalsandha Maalaiபத்துப் பாடலுக்கு ஒரு சந்தம்
  53. 65பன்மணிமாலைPanmani Maalaiஒருபோகு, அம்மானை, ஊசல் இல்லாத கலம்பகம்
  54. 66பாதாதிகேசம்Paadhaadhikesamஅடி முதல் முடி வரை இறைவனை வருணித்தல்
  55. 68புகழ்ச்சி மாலைPugazhchi Maalaiசிறந்த பெண்ணின் புகழை வஞ்சிப்பாவால் பாடுதல்
  56. 69புறநிலைPuranilaiநீ வணங்கும் தெய்வம் உன்னைக் காக்க
  57. 70புறநிலைவாழ்த்துPuranilai Vaazhthuவழிபடு தெய்வம் காக்கச் செல்வத்துடன் வாழ்க
  58. 71பெயர் நேரிசைPeyar Nerisaiதலைவனின் பெயரை நேரிசை வெண்பாக்களால் பாடுதல்
  59. 72பெயரின்னிசைPeyar Innisaiதலைவனின் பெயரை இன்னிசை வெண்பாக்களால் பாடுதல்
  60. 74பெருமகிழ்ச்சிமாலைPerumagizhchi Maalaiபெண்ணின் அழகும் குணமும் சிறப்பும்
  61. 75பெருமங்கலம்Perumangalamஅரசனின் பிறந்தநாள் விழா
  62. 76போர்க்கெழுவஞ்சிPorkkezhu Vanjiவஞ்சி சூடிப் போருக்கு எழும் படை
  63. 77மங்கலவள்ளைMangala Vallaiஉயர்குலப் பெண்ணை ஒன்பது வெண்பாக்களால் பாடுதல்
  64. 78மணிமாலைMani Maalaiவெண்பாவும் கலித்துறையும் விரவிய அறுபது பாடல்கள்
  65. 79முதுகாஞ்சிMudhukaanchiஇளமை நிலையாமை பற்றி முதியோர் அறிவுரை
  66. 81மும்மணிமாலைMummani Maalaiவெண்பா, கலித்துறை, விருத்தம் மாறி வரும் மாலை
  67. 82முலைப்பத்துMulaip Paththuபத்துப் பாடல்களில் பெண்ணழகு வருணனை
  68. 83மெய்க்கீர்த்திமாலைMeykkeerthi Maalaiஅரச மரபின் வழிவழிப் புகழ்
  69. 84வசந்தமாலைVasantha Maalaiதென்றலை வருணிக்கும் மாலை
  70. 85வரலாற்று வஞ்சிVaralaatru Vanjiஅரச குல வரலாறும் படையெழுச்சியும்
  71. 86வருக்கக் கோவைVarukkak Kovaiஎழுத்து வரிசையில் அமைந்த அகப்பொருட் கோவை
  72. 88வளமடல்Valamadalகாதலுக்காக மடலேறுவேன் என்னும் நெடும்பாடல்
  73. 89வாகைமாலைVaagai Maalaiவெற்றி வாகை சூடியவரின் புகழ்
  74. 90வாதோரணமஞ்சரிVaadhorana Manjariயானையை அடக்கிய வீரனின் புகழ்
  75. 91வாயுறைவாழ்த்துVaayurai Vaazhthuகசப்பான ஆனால் நலம் தரும் அறிவுரை
  76. 92விருத்தவிலக்கணம்Viruttha Ilakkanamவிருத்தப்பாவால் அமையும் நூல்
  77. 93விளக்குநிலைVilakku Nilaiசெங்கோலுடன் ஓங்கும் விளக்கு
  78. 94வீரவெட்சிமாலைVeera Vetchi Maalaiபகைவரின் ஆநிரைகளைக் கவர்ந்த வீரன்
  79. 95வெட்சிக்கரந்தைமஞ்சரிVetchik Karanthai Manjariகவர்ந்த ஆநிரைகளை மீட்டல்
  80. 96வேனில் மாலைVenil Maalaiஇளவேனிலும் முதுவேனிலும்
அடுத்த பகுதிசதகம் →