அறிமுகம்
சிலப்பதிகாரம் ஐம்பெருங்காப்பியங்களுள் முதலாவது. சேர மன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் மகனும், செங்குட்டுவனின் இளவலுமான இளங்கோவடிகள் இதைப் பாடினார் என்று நூலின் பதிகம் சொல்கிறது. அரசுரிமையைத் துறந்து குணவாயில் கோட்டத்தில் துறவியாக வாழ்ந்தவர் அவர். புகாரின் வணிகன் கோவலன், அவன் மனைவி கண்ணகி, நாடக மகள் மாதவி ஆகிய மூவரைச் சுற்றிக் கதை நடக்கிறது. "சிலம்பு" என்ற காற்சிலம்பே கதையை நகர்த்துவதால் இது சிலப்பதிகாரம்: சிலம்பைப் பற்றிய அதிகாரம்.
நூல் புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என மூன்று காண்டங்களாக, முப்பது காதைகளாக அமைந்துள்ளது. சோழ நாட்டுப் புகார், பாண்டிய நாட்டு மதுரை, சேர நாட்டு வஞ்சி என மூவேந்தர் நாடுகளும் ஒரே கதைக்குள் வருகின்றன. பாடல்களுக்கு இடையே உரைநடை வருவதால் இது "உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்"; இயல், இசை, நாடகம் மூன்றையும் கொண்டதால் "முத்தமிழ்க் காப்பியம்"; அரசர்களை அல்லாமல் குடிமக்களைத் தலைவராகக் கொண்டதால் "குடிமக்கள் காப்பியம்".
பதிகம் இந்நூல் சொல்லும் மூன்று உண்மைகளை முன்னரே அறிவிக்கிறது: அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்; புகழ்மிக்க பத்தினியை உயர்ந்தோர் போற்றுவர்; முன்செய்த வினை தன் பயனைத் தவறாமல் ஊட்டும். புகாரின் இந்திர விழா, மாதவியின் நடனம், கானல் வரியின் இசை, ஆய்ச்சியர் குரவையில் திருமாலின் புகழ், குன்றக் குரவையில் முருக வழிபாடு, வேட்டுவ வரியில் கொற்றவை வழிபாடு என்று தமிழர் வாழ்வும் வழிபாடும் இதில் முழுமையாகத் தெரிகின்றன. இறுதியில் கண்ணகி பத்தினித் தெய்வமாக வஞ்சியில் கோயில் கொள்கிறாள்; இன்றும் கேரளத்திலும் இலங்கையிலும் அவள் கண்ணகி அம்மனாக வழிபடப்படுகிறாள்.
அரும்பதவுரையும் அடியார்க்குநல்லார் உரையும் இதன் பழைய உரைகள். உ. வே. சாமிநாதையர் 1892இல் இதை முதன்முதலில் முழுமையாக அச்சிட்டார். இங்கே ஒவ்வொரு காதையும் ஒரு பக்கமாக, அச்சுப் பதிப்பில் உள்ளபடி பாடல்கள் மட்டும் தரப்பட்டுள்ளன; பொருளும் விளக்கமும் பின்னர் சேரும்.
Introduction
Silappathikaram is the first of the five great Tamil epics. Its Patikam says it was sung by Ilango Adigal, son of the Chera king Imayavaramban Nedumcheralathan and younger brother of Senguttuvan, who gave up his claim to the throne and lived as an ascetic at Gunavayil Kottam. The story turns on three people: Kovalan, a merchant of Puhar, his wife Kannagi, and the dancer Madhavi. Because an anklet, a silambu, drives the whole story, the book is called Silappathikaram, "the tale of the anklet".
The book has three kandams, Puhar, Madurai and Vanji, and thirty kaathais. The Chola port of Puhar, the Pandya capital Madurai and the Chera city of Vanji, the lands of all three crowned kings, come into one story. Because prose passages run between the songs it is called "a poem set with prose"; because it holds all three Tamils, literature, music and drama, it is "the epic of the three Tamils"; and because its heroes are ordinary townsfolk, not kings, it is "the epic of the people".
The Patikam announces at the start the three truths the book will show: dharma itself becomes death to a king who strays from justice; the great honour a woman of perfect chastity; and the deeds of a former life return to bear their fruit. The Indra festival of Puhar, Madhavi's dance, the music of the Kaanal Vari, the praise of Thirumal in the Aaychiyar Kuravai, the worship of Murugan in the Kunrakkuravai and of Kotravai in the Vettuva Vari: Tamil life and worship can be seen here whole. At the end Kannagi is enshrined at Vanji as Pattini, the goddess of chastity, and to this day she is worshipped as Kannagi Amman in Kerala and in Sri Lanka.
The old commentaries are the Arumpadavurai and the commentary of Adiyarkku Nallar. U. Ve. Swaminatha Iyer printed the complete text for the first time in 1892. Here each kaathai is one page, with the text as the printed edition gives it; meanings and explanations will follow.